Published : 09 Apr 2021 12:23 pm

Updated : 09 Apr 2021 12:23 pm

 

Published : 09 Apr 2021 12:23 PM
Last Updated : 09 Apr 2021 12:23 PM

கோடம்பாக்கம் சந்திப்பு: கமலுக்கு வில்லன்

kodambakkam-sandhippu

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த மறுநாளே 'விக்ரம்' படத்தின் பணிகளைத் தொடங்கிவிட்டார் கமல். கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வந்த போது கமல், லோகேஷ் கனகராஜ் இருவரும் சந்தித்து கதை, திரைக்கதை அமைப்பு குறித்து விவாதித்துள்ளார்கள். இந்தப் படத்தில் கமலுக்கு வில்லனாக ஃபகத் ஃபாசில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதைப் படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதைத் தன்னுடைய 'ஜோஜி' படத்தை விளம்பரப்படுத்துவதற்கு அளித்த பேட்டியில் ஃபகத் ஃபாசிலே தெரிவித்துள்ளார்.

குருவின் பாணியில் ‘வேலன்’


ஸ்கைமேன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில். முகேன், மீனாக்‌ஷி, பிரபு, சூரி, தம்பி ராமையா உட்பட பலர் நடித்துள்ள படம் ‘வேலன்’. படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு. இயக்குநர் சிவாவிடம் 'அண்ணாத்த' படம் வரை பணிபுரிந்துள்ள கவின் இயக்கியிருக்கிறார். சிவா பாணியில், குடும்பப் பாங்கான கதையை தனது முதல் படமாக உருவாக்கி வருகிறார் கவின்.

இரு வேறு காலகட்டம்!

கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா, அக்‌ஷரா கவுடா, மன்சூர் அலிகான் எனப் பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் 'சூர்ப்பனகை'. படத்தில் பல முக்கியக் காட்சிகள் 1920-களில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் இடங்களைப் படப்பிடிப்புக்காகத் தேர்வுசெய்ய படக்குழு பெரும் தேடலில் இறங்கி வெற்றிபெற்றுள்ளதாம். 1920கள் தற்போதைய காலகட்டம் என இரு இழைகள் இணையும் த்ரில்லர் திரைக்கதையுடன் 'சூர்ப்பனகை' உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜூலை மாதம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

சிம்பு ரசிகர்களின் கவனத்துக்கு...

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் 'மாநாடு' படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு, திட்டமிடப்பட்ட நாள்களுக்கு சற்று முன்பாகவே முடிந்துவிட்டது. இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மகிழ்ச்சியில் இருக்கிறார். அதேபோல், அரங்குகளில் படமாக்கவேண்டிய காட்சிகளுக்கு 14 நாள்கள் திட்டமிட்டு அவற்றை 7 நாள்களில் முடித்துவிட்டார்களாம். இன்னும் 2 நாள்கள் மாலத்தீவில் படப்பிடிப்பு இருக்கிறது என்கிறது படக்குழு. அத்துடன் படப்பிடிப்பு முடிகிறதாம். இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைவதைப் பொறுத்து படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யவிருக்கிறாராம் தயாரிப்பாளர்.

விதார்த் - 25

யதார்த்தமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருபவர் விதார்த். அவருடைய நடிப்பில் 25-வது படமாக உருவாகி வருகிறது 'கார்பன்'. ஸ்ரீனிவாசன் இயக்கியிருக்கும் இதில், நாயகன் கனவில் காண்பெதல்லாம் நிஜத்தில் நடக்கும் கதைக் களம். விதார்த் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு வரும் கனவுகளுக்கும் அதனால் சக கதாபாத்திரங்கள் சந்திக்கும் சிக்கல்களும் தீர்வும்தான் திரைக்கதை. த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இதில் நாயகியாக தான்யா பாலகிருஷ்ணன் நடித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கார்த்தி அடுத்து!

வசூல்ரீதியாக ‘சுல்தான்’ படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பால் குஷியாக இருக்கிறார் கார்த்தி. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூருக்கு செல்லவிருந்தார். கரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு சற்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, பி.எஸ்.மித்ரன், முத்தையா ஆகிய இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கிறார். இந்த இரு படங்களுக்குமான முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.


கோடம்பாக்கம் சந்திப்புகமலுக்கு வில்லன்கமல்Kodambakkam Sandhippuவேலன்அண்ணாத்தசிம்பு ரசிகர்கள்வெங்கட் பிரபுமாநாடுகார்த்திகுரு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

nadathaai-vaazhi

நடந்தாய் வாழி!

இணைப்பிதழ்கள்

More From this Author

x