Last Updated : 30 Nov, 2015 10:59 AM

 

Published : 30 Nov 2015 10:59 AM
Last Updated : 30 Nov 2015 10:59 AM

கோடீஸ்வரர்களுக்கான கார்கள்!

கார்கள் அந்தஸ்தின் அடையா ளமாக இருந்தது மாறி தற்போது போக்குவரத்துக்கு முக்கிய காரணியாக மாறிவிட்டது. இருந் தாலும் பணக்காரர்கள் குறிப்பாக கோடீஸ்வரர்கள் தங்களின் அந்தஸ்தை நிலைநிறுத்திக் கொள்ளவும், அதை பறைசாற்றிக் கொள்ளவும் சொகுசு கார்களையும், அதி நவீன தொழில் நுட்ப கார்களையும் தேர்வு செய்வதை வழக்கமாகக் கொண் டுள்ளனர்.

தொழிலதிபர்களில் சிலர் கார் ரேஸ் பிரியர்களாகவும் உள்ளனர். இத்தகையவர்களைக் குறிவைத்து கடந்த வாரத்தில் இரண்டு சர்வதேச நிறுவனங்கள் புதிய தொழில் நுட்பத்திலான கார்களை அறிமுகப் படுத்தின. முதலாவது மெர்சிடெஸ் பென்ஸ். சொகுசு கார் என்றாலே ஜெர்மனியின் மெர்சிடெஸ் பென்ஸ்தான் முதலில் நினைவுக்கு வரும். அந்நிறுவனம் சர்வதேச அளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

அடுத்து இத்தாலியைச் சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் ஹரிகேன் எனும் புதிய ரகக் காரை சந்தைப்படுத்தியுள்ளது. இதுவும் பந்தயக்கார்களைப் போல சீறிப் பாயக் கூடியதே.

மெர்சிடெஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ்:

பென்ஸ் கார்களின் வரிசையில் ஏஎம்ஜி ஜிடி-எஸ் பிரிவு கார்களில் ரேஸ் என்ஜின் பொறுத்தப்பட்டு வெளி வந்துள்ளது பந்தய மைதானத்தில் சீறிப் பாய்வதற்கு உதவும் டர்போ சார்ஜர் மற்றும் உலர்ந்த சம்ப் லூப்ரிகேஷன் வசதி இதில் உள்ளது. முதல் முறையாக இதில் 4 லிட்டர் வி8 இன்ஜின் உள்ளதால் இது வெளியிடும் சக்தி 375 கிலோவாட்டாகும். அதாவது 510 ஹெச்பி திறனோடு 650 நியூட்டன் மீட்டர் செயல்திறன் கொண்டுள்ளதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 100 கி.மீ. வேகத்தை 3.8 விநாடிகளில் எட்டிவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 310 கி.மீ ஆகும்.

பந்தய மைதானங்களில் சீறிப் பாயும் கார்களைப் போல இது எடை குறைவானதாக உருவாக்கப்பட் டுள்ளது. இதில் சாலைகளில் பயணத் தின் தன்மைக்கேற்ப இன்ஜின் செயல் பாடுகளை மாற்றியமைக்கும் வகையில் வசதிகள் உள்ளன. சொகுசான பயணம், சாகச பயணம் (ஸ்போர்ட்) மற்றும் பந்தய மைதான சவாரி (ஸ்போர்ட்ஸ் பிளஸ்) ஆகிய வசதிகள் உள்ளன. இதனால் பயணத்துக்கேற்ப வாகனத்தின் செயல்பாடுகளை தீர்மானிக்க முடியும். இதில் மேம்பட்ட சஸ்பென்ஷன் இருப்பதால் நீண்ட தூரம் இந்தக் காரை ஓட்டினாலும் அலுப்பு தட்டாது. இதன் உள்புற வடிவமைப்பு தேர்ந்த வல்லுநர்களால் உருவாக்கப்பட் டுள்ளது. டேஷ்போர்டு, இரட்டை வண்ணத்திலும் இருக்கைள் உயர் ரக தோலினாலும் ஆனவை.

இந்த ஸ்போர்ட்ஸ் காரை, ரேஸ் பந்தய வீரர் பெர்ன்ட் ஷ்நெய்டர் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவர் 43 கார் பந்தய வெற்றிகளைக் குவித்தவர். 1992-ம் ஆண்டு முதல் பென்ஸ் நிறுவன விளம்பர தூதராக இருக்கும் இவரைக் கொண்டு ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்தியது மிகவும் பொறுத்தமான நிகழ்வாகும். மேம்பட்ட வசதிகளை உள்ளடக்கிய இந்த ஸ்போர்ட்ஸ் காரின் விலை ரூ.2.40 கோடி

லம்போர்கினி ஹரிகேன் எல்பி 580:

இந்நிறுவனத்தின் பிரபல ஸ்போர்ட்ஸ் காரின் மேம்பட்ட ரகமாக வெளி வந்துள்ளது. பின் சக்கர சுழற்சி மட்டுமே உள்ளதாக இந்த கார் உருவாக் கப்பட்டுள்ளது.

சீறிப் பாயும் வகையில் 5.2 லிட்டர் இன்ஜின் உள்ளதால் இதிலிருந்து 426 கிலோவாட் அதாவது 580 ஹெச்பி திறன் 540 நியூட்டன் மீட்டர் திறனுடன் வெளிப்பாயும். 3.4 விநாடிகளில் இது 100 கி.மீ வேகத்தைத் தொடரும். மணிக்கு 191 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியது. இந்நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான நான்கு சக்கர சுழற்சியைக் கொண்ட ஹரிகேன் எல்பி 610-4 ரகத்தை விட இது மேம்பட்டதாகும். இதில் இரு சக்கர சுழற்சி இருந்தாலும் இதன் செயல்வேகம் அனைத்தையும் மிஞ்சிவிடும். இன்ஜினின் செயல் திறனை மேம் படுத்தும் வகையில் இன்ஜினின் முழுத் திறன் வெளிப் படுத்தாத சூழலில் மொத்தமுள்ள 10 சிலிண்டர்களில் 5 சிலிண்டர்களின் செயல்பாடு தானாகவே நின்றுவிடும். இதனால் இன்ஜின் நீண்ட காலம் உழைக்கும்.

கார் வேகம் பிடிக்கும்போது இவை மீண்டும் தானாக இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 7 அடுக்கு கிளட்ச் பிளேட்டுகள் உள்ளதால் எளிதாக கியர் மாற்ற வழிவகுக்கிறது. இதில் நவீன பொழுது போக்கு சாதனங்களும் உள்ளது. 12.3 அங்குல டிஎப்டி இன்ஸ்ட்ருமென்ட் பேனலும் உள்ளது. இந்தக் காரின் விலை ரூ.2.99 கோடி.

இந்தியாவில் சொகுசு கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதன் விளைவாக அனைத்து சர்வதேச நிறுவனங்களும் தொடர்ந்து புதிய தயாரிப்புகளை இந்திய சந்தை யில் அறிமுகப்படுத்திக் கொண்டே யிருக்கின்றன.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x