Published : 28 Nov 2015 12:11 PM
Last Updated : 28 Nov 2015 12:11 PM

நலம் நலமறிய ஆவல்: எரிச்சல் குறைய மருத்துவம்

எனக்கு வயது 25. சிறுநீர் கழிக்கும் போது ஒரே எரிச்சலாக இருக்கிறது. சில நேரங்களில் சிறுநீர் கழித்த பின்னர் அடிவயிற்றில் வலி ஏற்படு கிறது, அப்போது தண்ணீர் குடித்தால் வலி குறைந்துவிடுகிறது. சிறுநீர் அதிக நீர்க் குமிழிகளுடன் வருகிறது. இதற்கான காரணம் மற்றும் தீர்வு முறைகளைக் கூறுங்களேன்?

- ரவி, மின்னஞ்சல்

இந்தக் கேள்விக்குச் சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஜெ. பாஸ்கரன் பதிலளிக்கிறார்:

உங்களுக்குச் சிறுநீர் தொற்று (urinary tract infection) இருக் கலாம். இதற்குக் கீழ்க்கண்ட விஷயங்களைச் செய்ய வேண்டும்:

1. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்கும்வரை காத்திருக்க வேண்டாம்.

2. Ultrasonogram KUBU என்ற பரி சோதனையைச் செய்து கொண்டு, சிறுநீர் நோய்த் தொற்றுக்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள லாம்; சிறுநீர்ப் பாதையில் கல், அடைப்பு, வேறு வகை அழுத்தங்கள் எனக் காரணத்துக்கு ஏற்றாற்போல் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. தேவைப் பட்டால் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளலாம். ஆனால், இது எல்லாமே உரிய மருத்துவ ஆலோ சனையுடன்தான் செய்ய வேண்டும். நிறைய தண்ணீர், பழரசங்கள், மோர் போன்றவை நிச்சயம் உதவும்.

நிபுணர்கள் பதில் அளிக்கிறார்கள்

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதி தொடர்ந்து வெளிவரும். பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் முக்கியமான மருத்துவ சந்தேகங்களை தொடர்ந்து அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-2

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x