Published : 16 Mar 2021 03:55 PM
Last Updated : 16 Mar 2021 03:55 PM

சேதி தெரியுமா?

தொகுப்பு: மிது 

மார்ச் 5: 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. சிறுதானியங்களால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்த அறிவிப்பு பயன்படும்.
மார்ச் 5: மதுரை கோட்டத்தில் திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 6: சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் சாம்பியன்கள், சீனியர் கமிட்டியின் தலைவராக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 8: உலக மல்யுத்த வீராங்கனைகள் தரவரிசைப் பட்டியலில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முதலிடம் பிடித்தார்.
மார்ச் 10: உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பொறுப்பேற்றார். முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்தநிலையில், புதிய முதல்வர் தேர்வுசெய்யப்பட்டார்.
மார்ச் 10: மூன்றாவது ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ். கரஞ்ச் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.
மார்ச் 11: ஆசியாவின் முதல் தேசிய ஓங்கில் (டால்பின்) ஆராய்ச்சி மையம் பிஹார் தலைநகர் பாட்னா பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x