Published : 02 Mar 2021 09:09 am

Updated : 02 Mar 2021 09:10 am

 

Published : 02 Mar 2021 09:09 AM
Last Updated : 02 Mar 2021 09:10 AM

சேதி தெரியுமா?

weekly-news

தொகுப்பு: மிது 

பிப்.21: நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத்தில் திறக்கப்பட்டது. திருவனந்தபுரத்துக்கு அருகே மங்களாபுரத்தில் டிஜிட்டல் அறிவியல், புத்தாக்க, தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் என்கிற பெயரில் இது அமைந்துள்ளது.

பிப்.22: புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது.


பிப்.22: ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலம் தலைவாசலில் 1,100 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,022 கோடி செலவில் திறக்கப்பட்டுள்ளது.

பிப்.23: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

பிப்.25: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக (77 டெஸ்ட் போட்டி) 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாமிடத்தைப் பிடித்தார்.

பிப்.25: 9 முதல் 11-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பிப்.26: அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 தேர்தல் நடைபெறும்.



சேதி தெரியுமாWeekly Newsடிஜிட்டல் பல்கலைக்கழகம்புதுச்சேரி சட்டப்பேரவைகால்நடை பூங்காஆஸ்திரேலியஓபன் டென்னிஸ்டெஸ்ட் கிரிக்கெட்பொதுத்தேர்வு ரத்துசட்டப்பேரவைத் தேர்தல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x