Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

44 வது சென்னை புத்தகக் காட்சி 2021: புத்தகக் காட்சியில் புதிய சூழலியல் நூல்கள்

கரோனா தொற்றுப் பரவலால் ஒத்திவைக்கப்பட்டிருந்த சென்னை புத்தகக் காட்சி 2021, தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த புத்தகத் திருவிழாவை ஒட்டி சுற்றுச்சூழல் சார்ந்த பல நூல்கள் வெளியாகியுள்ளன.

கோவை சதாசிவத்தின் ‘பறவைகளின் எச்சத்தில் விளைந்த காடு,’ ‘கழுதைப்புலி’, ‘மரப்பேச்சி’ ஆகியவை வெளியாகியுள்ளன. அனைத்தும் குறிஞ்சி வெளியீடு (99650 75221). ஏ.சண்முகானந்தத்தின் ‘காடழித்து மரம் வளர்ப்போம்’, மருத்துவர் வி.விக்ரம் குமாரின் ‘பறவைகள் சூழ் உலகு‘ ஆகிய நூல்களைக் காக்கைக் கூடு (9043605144) பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

‘வேளம் – உரையாடும் நெய்தல் தமிழ்’ என்கிற நூலைப் பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் எழுத்தில் உயிர் பதிப்பகம் (98403 64783) வெளியிட்டுள்ளது. நக்கீரன் எழுதிப் பல விருதுகளைப் பெற்ற ‘காடோடி’ நாவலின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது (காடோடி பதிப்பகம் - 80727 30977).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x