Published : 17 Nov 2015 11:19 AM
Last Updated : 17 Nov 2015 11:19 AM

வெற்றி நூலகம் - 17.11.2015

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானியான நெல்லை சு.முத்து எழுதிய நூல். இந்தநூலில், அறிவியல் தமிழ், கவிதைகள், ஹைக்கூ, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, அறிவியல் விழிப்புணர்வு ஆகிய பிரிவுகளில் கட்டுரைகளும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

அறிவியல் பார்வைகள் பதிவுகள்

நெல்லை சு.முத்து

விலை ரூ. 150, பக்.216

சேகர் பதிப்பகம்

சென்னை- 600078

தொலைபேசி: 044-65383000

இந்திய ஆட்சிப் பணித் தேர்வை எழுதுபவர்கள் தமிழ் மொழித் தேர்வை எளிதில் எதிர்கொள்ள உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நூல் ஐ.ஏ.எஸ். தமிழ் முதல் தாள். பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் இந்தநூலை அழகுற படைத்துள்ளார். தமிழ் இலக்கணமும் இலக்கியமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

ஐ.ஏ.எஸ். தமிழ் முதல் தாள்

பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன்

விலை ரூ. 150, பக்.264

மீனாட்சி புத்தக நிலையம்

மதுரை - 625 001

தொலைபேசி: 0452- 2345971

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x