

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்வதன்மூலம் N.I.T. அல்லது I.I.I.T.க்களில் சேர முடியும் என்று குறிப்பிட்டிருந்தோம்..
திருவனந்தபுரத்தில் உள்ளது இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (I.I.S.T.). இது இஸ்ரோவின் கீழ் இயங்குகிறது. நான்கு வருட பட்டப்படிப்பை (B.Tech.) வழங்குகிறது. இதில் வானிய லுக்கு முக்கியத்துவம் கொடுக் கப்படுகிறது. ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அடிப் படையாகக் கொண்டுதான் இதற்கும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஐ.ஐ.டி.யில் இந்த ஆண்டு சேர்ந்த சிலரை அணுகி நுழைவுத் தேர்வு குறித்த அவர்களின் கருத்துகளைக் கேட்டோம்.
‘‘CBSE அமைப்புதான் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வை நடத்துகிறது. எனவே பள்ளியில் CBSE பாட திட்டத்தில் சேர்ந்து படிப்பவர் களுக்கு நுழைவுத் தேர்வும் கொஞ் சம் எளிதாக இருக்கும். ஆனால் வேதியலைப் பொறுத்தவரை மாநில பாடத் திட்டத்தில் சேர்ந்து படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கிறது. யாராக இருந்தாலும் கணிதத்தில் மிக அதிகப் பயிற்சி தேவை’’.
‘‘பள்ளிப் படிப்புக்கும் ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான படிப்புக் கும் சிலபஸில் அதிக வித்தியா சம் இல்லை. ஆனால் அணுகு முறையில் மிக வித்தியாசம் உண்டு. நுழைவுத் தேர்வில் எதிர் பாராத கோணங்களில் நாம் படித் ததிலிருந்து கேட்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே பாடங்களை ஆழமாக முழுமையாக அறிந் திருக்க வேண்டும்’’
‘‘இப்போதெல்லாம் பத்தாம் வகுப்பிலிருந்தே ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கான தனிப் பயிற் சியை எடுத்துக் கொள்பவர்களே அதிகம். ஒருவருடப் பயிற்சி போதும் என்பது என் கருத்து’’.
நுழைவுத் தேர்வில் கேள்விகள் எல்லாம் ஆப்ஜெக்டிவ் தன்மை கொண்டவை. அதாவது ஒரு கேள்வி, அதற்கு மூன்று, நான்கு பதில்கள். அவற்றில் சரியானதைத் தேர்வு செய்ய வேண்டும்.
கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கேட்கப்படு கின்றன. எனவே தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் ஆங்கிலத் திறமையையும் மேம்படுத்திக் கொள்வது நல்லது.
நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலமாகவும் எழுதலாம். Architecture course (B.Arch.)க்கான தேர்வை கணினியின் மூலம் எழுத முடியாது. நேரடியாக மட்டுமே எழுத முடியும்.
தேர்வில் Negative மதிப்பெண் கள் உண்டு. அதாவது தவறான விடையை எழுதினால் கொஞ்சம் மதிப்பெண்ணைக் குறைப்பார் கள். விடையே எழுதாமல் விட்டு விட்டால், அதற்காக மதிப்பெண் குறைக்கப்படாது.
ஐ.ஐ.டி.யில் படிப்பதில் மேலும் சில நன்மைகள் உண்டு. ஐ.ஐ.டி.க்களோடு பல பிரபல நிறுவனங்கள் தொடர்ந்து இணைப்பில் உள் ளன. இதன் காரணமாக ஐ.ஐ.டி. மாணவர்களைத் தங்கள் நிறுவ னத்துக்கு ‘கொத்திக் கொண்டு போக’ பல நிறுவனங்கள் தயா ராக உள்ளன.
தவிர ஐ.ஐ.டி.யில் உள்ள முன் னாள் மாணவர்கள் கூட்டமைப்பு கள் (ALUMNI ASSOCIATIONS) மிகவும் செயல்படும் தன்மை யோடு உள்ளன. ஐ.ஐ.டி.யில் படித்தவர்கள் பல உலகப்புகழ் பெற்ற நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக இருக்கின்றனர். இவர்கள் தங்கள் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்த ஐ.ஐ.டி.படிப்பை முடித்தவர்களுக்கு முன் னுரிமை அளிக்கிறார்கள். சகோ தர பாசம்!
ஐ.ஐ.டி.க்கான நுழைவுத் தேர்வு என்று JEE (Mains) என்பதைக் குறிப்பிட்டோம். இதை நடத்துவது ஐ.ஐ.டி. அல்ல. CBSE என்று பரவலாக அறியப்படும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்தான்.
ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கு Mains, Advanced என்று இரண்டு தேர்வுகள் தேவையா? இது மாணவர்களுக்கு அதிக அயர்வை ஏற்படுத்துகிறது என்றும் பயிற்சி நிலையங்களுக்கே அதிக சாதகமாக இருக்கிறது என்றும் கருத்துகள் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து பல உயர்மட்ட விவாதங்கள். ஒரே தேர்வு போதுமென்றால் அதை CBSE நடத்துமா? அல்லது ஐ.ஐ.டி.யா? (இதுவரை ஐ.ஐ.டி. Advanced தேர்வை ஐ.ஐ.டி.தான் நடத்தியது. ஒவ்வொரு ஆண்டு ஒவ்வொரு ஐ.ஐ.டி. என்று முறை வைத்துக் கொண்டு நடத்துகின்றன).
சென்னை ஐ.ஐ.டி.யில் விசா ரித்தபோது இது குறித்தமுடிவுகள் மிக விரையில் (ஓரிரு நாட்களில்) வெளியாகும் என்றார்கள். இதுகுறித்த விவரங்கள் வெளி யாகும்போது அவற்றை நிச்சயம் வெளியிடுகிறோம். நீங்கள் ஆவலு டன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அறிவிப்பு மேலே தரப்பட்டுள்ளது.