Last Updated : 13 Oct, 2015 09:07 AM

 

Published : 13 Oct 2015 09:07 AM
Last Updated : 13 Oct 2015 09:07 AM

திரை விமர்சனம்: மசாலா படம்

காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகருக்குப் படத்தைப் பற்றி விமர் சனம் செய்ய உரிமை உண்டு என்பது ஒரு தரப்பு. சினிமா என்பது ஒரு வியாபாரம், விமர்சனம் என்ற பெயரில் அடுத்தவர் வியாபாரத் தைக் குலைக்கும் உரிமை இவர் களுக்கு கிடையாது என்பது மற்றொரு தரப்பு. இந்த இரண்டு தரப்புகளுக்கு இடையிலான மோதல் தான் ‘மசாலா படம்’.

மாஸ் ஹீரோக்களை வைத்து மசாலா படங்கள் எடுத்துவருபவர் பிரபல தயாரிப்பாளர் ராமன் (வெங்கட்ராமன்). இவர் படத்தை யூடியூபில் விமர்சனம் செய்து கிழிக் கிறார் கார்த்திக் (அர்ஜுன் சோமை யாஜூலா) என்ற வலைப்பூ பதிவர். இன்னும் சில பதிவர்கள் கிழித்த கிழியில் படத்தின் வசூல் பாதிக் கிறது. கார்த்தி, தனது சமூக வலை தள நண்பர்களுடன் தயாரிப்பாளர் ராமனைத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் நேருக்கு நேர் சந்திக்கிறார்.

இன்னும் எவ்வளவு காலத்துக் குத்தான் யதார்த்தத்தில் இல்லாத விஷயங்களை திரைப்படமாக எடுத்து ‘காமன் மேனை’ ஏமாற்று வீர்கள் என்று கார்த்திக் டீம் கேட்கிறது. விமர்சனம் பண்ணுவது எளிது; ஆனால் ஹிட்டடிக்கும் ஒரு மசாலா படம் எடுப்பது அத்தனை சுலபமல்ல; முடிந்தால் ஆறு மாதத்துக்குள் ஒரு கமர்ஷியல் படத் துக்கான கதையுடன் வாருங்கள்; அதை நானே தயாரிக்கிறேன் என்று சவால் விடுகிறார் தயா ரிப்பாளர். இவர்கள் சவாலை ஏற்றுக்கொள்கிறார்கள்.

யதார்த்த வாழ்க்கையைத்தான் சினிமா பிரதிபலிக்க வேண்டும் என்று நம்பும் இந்தக் குழு, ஆக்‌ஷன், ரொமான்ஸ், நகைச்சுவை ஆகிய மூன்று சுவைகளையும் பிரதிபலிக் கும் விதமாக மூன்று இளைஞர் களைக் கண்காணித்துக் கதையை எழுத முனைகிறது. உதயன் (பாபி சிம்ஹா) என்கிற தொழில்முறை ரவுடி, மணிகண்டன் (சிவா) என்கிற நடுத்தரக் குடும்ப இளைஞன், கிரிஷ் (கௌரவ்) என்கிற பணக்கார ரொமான்டிக் இளைஞன் ஆகிய மூவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களுடன் நெருக்கமாகப் பழகி அவர்களது வாழ்க்கையை அறிந்துகொள்ள தியாவை (லட்சுமி தேவி) அனுப்புகிறார்கள்.

லட்சுமி தேவி இந்த மூவரின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற் றங்கள் என்ன? கார்த்திக் குழு வால் சவாலில் ஜெயிக்க முடிந்ததா ஆகிய கேள்விகளுக்கான பதில் கள்தான் ‘மசாலா படம்’.

விமர்சகர்களுக்கும் தயாரிப் பாளர்களுக்கும் இடையிலான முரண்களையும் மோதல்களையும் சித்தரிக்கும் தொடக்கக் காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளன. குறிப் பாகப் பண்பலை நிகழ்ச்சி கல கலப்பும் கூர்மையுமாக உள்ளது. தொலைக்காட்சி விவாத அரங்கில் மோதல் முற்றும்போது படம் பெரிதாக எதிர்பார்க்க வைக்கிறது.

இங்கேதான் சிக்கல் தொடங்கு கிறது. யதார்த்த சினிமாவை விரும்பும் இளைஞர்கள், ஒரு பெண்ணை அனுப்பி மூன்று பேரின் வாழ்க்கையில் சலனங்களை ஏற்படுத்தும் உத்தியைக் கையாள் வதாகக் காட்டுவது இடிக்கிறது. பிறரது வாழ்வில் குறுக்கிட்டு செயற்கையாக அவர்களது வாழ்வை மாற்றிய பிறகு யதார்த்தம் எங்கே இருக்கும்? மூவருடனும் அந்தப் பெண் பழகுவது, அத னால் ஏற்படும் மாற்றங்கள் எல் லாமே வலைப்பூக்களால் விமர் சிக்கப்படும் ‘க்ளிஷே’க்களாகவே உள்ளன. ரவுடி, பணக்கார இளைஞன் ஆகியோரின் சித்தரிப் பும் அப்படியே. நடுத்தர வர்க்கத்து இளைஞனைச் சித்தரித்த விதத் தில் மட்டுமே யதார்த்தம் சற்று எட்டிப் பார்க்கிறது.

மூன்று பேரின் வாழ்வில் ஏற் படும் மாற்றங்களை அடுத்து ஏற்படும் திருப்பம் சுவாரஸ்ய மானது. மூன்று அனுபவங்களை யும் ஒன்றிணைத்துத் தயாரிப்பாளர் திரைக்கதையை உருவாக்குவது சபாஷ் போடவைக்கும் ஐடியா தான். ஆனால் அவரது ஐடி யாவை வசனமாகவே வெளிப் படுத்துவதை ரசிக்க முடிய வில்லை.

பாபி சிம்ஹாவும் சிவாவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். லட்சுமி தேவியின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. தயாரிப்பாளராக வரும் வெங்கட்ராமன் கச்சிதம். இயக்குநர் லக்ஷ்மண் குமாரே ஒளிப்பதிவையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது.

கார்த்திக் ஆச்சார்யாவின் பின்னணி இசை நன்றாக உள்ளது. பாடல்கள் பின் னணியில் ஒலிக்கையில், காட்சிப் படிமங்களின் மூலம் கதை நகரு கிறது. பாடல்களிலேயே கதை யைச் சொல்லிவிடுவார்களோ என்று தோன்றும் அளவுக்குப் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின் றன. டைட்டில் பாடலும் அதற் கான காட்சிகளும் வெகுஜன சினிமாவைக் கொண்டாடும் வகையில் உள்ளன.

மசாலா படம் என்பது சாமானி யப் பார்வையாளரின் கனவின் திரை வடிவம் என்றும், வெவ்வேறு மனிதர்களின் குணாம்சங்களின் ஒட்டுமொத்தக் கலவைதான் மசாலா பட நாயகனின் பிம்பம் என்றும் சொல்வதை ஏற்க முடிகிறது. ஆனால், இதைத் திரை அனுபவமாகத் தர அவர் தவறிவிட்டார். மசாலா படங்கள் எல்லாவற்றையும் யாரும் கலாய்ப் பதில்லை என்பதை இயக்குநர் மறந்துவிடுகிறார்.

இணைய விமர்சகர்களில் பெரும்பாலானவர்கள் நேர்த்தி யான வணிக மசாலா படங்களை விரும்பவும் பாராட்டவும் செய் கிறார்கள். மோசமான மசாலா படங்களையே கிழிக்கிறார்கள். சாமானிய ரசிகர்களோ திரையரங் கிலேயே மோசமான படங்களைக் கலாய்த்துவிடுகிறார்கள். இந்த யதார்த்தத்தைக் கணக்கில் எடுத் துக்கொள்ளத் தவறுகிறார் இயக்கு நர். அதனால்தான் மசாலா படங் கள் பற்றிய அவரது வாதங்கள் எடுபடவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x