Last Updated : 03 Oct, 2015 09:02 AM

 

Published : 03 Oct 2015 09:02 AM
Last Updated : 03 Oct 2015 09:02 AM

கம்பீரமாக படுக்கையறையை வடிவமைக்கலாம்!

தங்கநிறத்தை உங்கள் படுக்கையறைக்குள் பயன்படுத்த மற்றொரு வழி தங்க நிற ஃப்ரேமுடைய கண்ணாடி. இந்தக் கண்ணாடியைப் பாரம்பரிய வடிவமைப்பில் இருக்குமாறு வாங்கினால், அறைக்கு அது கூடுதல் ஆழமான தோற்றத்தைக் கொடுக்கும்.

எளிமையான வடிவமைப்பில் கிடைக்கும் தங்க நிற விளக்குகளும் (Lamps) உங்கள் படுக்கையறையை அலங்கரிக்க உதவும். இந்த விளக்குகளை உலோகத்தில் இருக்குமாறு தேர்ந்தெடுக்கலாம். மேசை விளக்குகள் மட்டுமல்லாமல் கூரைவிளக்குகளையும் தங்க நிறத்தில் பயன்படுத்தலாம்.

அறைக்கலன்களையும் அதேமாதிரி உலோகத்தில் தங்கநிறத்தில் வாங்கிப் பயன்படுத்தலாம். ஒருவேளை, அறையில் தங்கநிறத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாகத் தோன்றினால் வெறும் நாற்காலிகளில் மட்டும் தங்கநிறத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படியில்லையென்றால், படுக்கையறையின் சிறுமேசைகளை வெண்கல நிறத்தில் தேர்ந்தெடுக்கலாம். வெண்கல நிறமும், தங்க நிறமும் இரண்டும் கலந்தும் படுக்கையறையை வடிவமைக்கலாம்.

தங்க நிறம் எப்போதும் ஆடம்பரத்தையும், கம்பீரத்தையும் பறைசாற்றும் நிறம். அதனால், அதைப் பயன்படுத்தும்போது துணிச்சலுடன் பயன்படுத்த வேண்டும். படுக்கையறையின் பிரதான சுவரை முழுக்க முழுக்கத் தங்க நிறத்தில் வண்ணமடிக்கலாம். இது படுக்கையறைக்குக் கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும்.

படுக்கையறையில் பயன்படுத்தும் கலைப்பொருட்களையும் தங்கநிறத்தில் தேர்ந்தெடுப்பது சிறந்தது. அறையை நிரப்ப ஆங்காங்கே இந்தப் பொருட்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தங்க நிறமும், வெண்கல நிறமும் வீட்டை அலங்கரிப்பதற்குப் பொருத்தமான நிறங்கள். இந்த இரண்டு நிறங்களை வைத்துப் படுக்கையறையை வடிவமைக்கும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. படுக்கையறையைப் பிரகாசத்துடன் வடிவமைக்க விரும்புபவர்கள் தங்க நிறத்தைத் தேர்ந்தெடுக்கலாம். வெண்கல நிறத்தை வைத்தும் அறையை ஜொலிக்க வைக்க முடியும். தங்க நிறத்தைப் படுக்கையறைக்குப் பயன்படுத்துவதற்கான சில வழிமுறைகள்...

படுக்கையறைச் சுவரை வெள்ளை நிறத்தில் அமைத்து அதன்மீது தங்க நிற பேட்டர்ன் இருக்கும் வால்பேப்பரை ஒட்டலாம். தங்க நிற மலர்கள் பேட்டர்ன் (Floral Pattern) சிறந்த தேர்வாக இருக்கும். இது அறைக்கு ஒரு கனவுலகின் தோற்றத்தைக் கொடுக்கும். அத்துடன், அறையின் மற்ற அறைக்கலன்களையும் இந்த வால்பேப்பருடன் பொருந்தும்படி வடிவமைக்கமுடியும்.

படுக்கையறைக்குள் தங்கநிறத்தைப் பயன்படுத்துவது எப்படி என்று யோசிப்பவர்கள் முதலில் தங்க நிற குஷன்களிலிருந்து தொடங்கலாம். தங்க நிற வெல்வட் குஷன்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இதே மாதிரி தலையணைகளையும், திரைச்சீலைகளையும்கூட மென்மையான தங்க நிறத்தில் தேர்ந்தெடுக்கலாம்.

வால்பேப்பர் மட்டுமல்லாமல் வால் டெக்காலை (Wall Decal) வைத்தும் படுக்கையறையை அலங்கரிக்கலாம். தங்க நிறத்தில் எளிமையான வட்டம், சதுரம், முக்கோணம் போன்ற வடிவங்களைப் பயன்படுத்தலாம். இந்த டெக்காலையும் வெள்ளை வண்ணமடித்த சுவரில் பயன்படுத்துவதே சிறந்ததாக இருக்கும். தங்க நிறப் புள்ளிகளை எளிதில் வால் டெக்காலாகப் பயன்படுத்த முடியும். இவற்றை ஒட்டுவதும் நீக்குவதும் எளிதாக இருக்கும்.

தங்கநிறத்தை உங்கள் படுக்கையறைக்குள் பயன்படுத்த மற்றொரு வழி தங்க நிற ஃப்ரேமுடைய கண்ணாடி. இந்தக் கண்ணாடியைப் பாரம்பரிய வடிவமைப்பில் இருக்குமாறு வாங்கினால், அறைக்கு அது கூடுதல் ஆழமான தோற்றத்தைக் கொடுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x