Last Updated : 31 Dec, 2020 03:18 AM

 

Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

சித்திரப் பேச்சு: உலகளந்த பெருமாள்

பதினாறாம் நூற்றாண்டில், கிருஷ்ண தேவராயரின் இளைய சகோதரர் அச்சுத தேவராயரால் கட்டப்பட்ட திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜ பொருமாள் கோயிலில்தான் இந்த உலகளந்த பெருமாள் எழுந்தருளியுள்ளார். எட்டுக் கரங்களுடன், ஆஜானுபாகுவாக, கம்பீரமாகவும், சிற்ப சாஸ்திர வல்லுநர்களே வியக்கும் வண்ணம் தேஜஸ் துலங்கக் காணப்படுகிறார். தலைக்கிரீடம், இரு காதுகளிலும் தாமரை மொட்டு போன்ற அணிகலன்கள், காதோரங்களில் தொங்கும் முத்து மணியாரங்கள், மார்பிலும், இடையிலும் காணப்படும் வித்தியாசமான அணிமணிகள், ஆடை ஆபரணங்கள் எனக் கச்சிதமாக அமைந்துள்ளது.

வலது காலை ஊன்றி பூமியை ஒரு அடியாகவும், இடது காலைத் தூக்கி ஆகாயத்தை ஒர் அடியாகவும் அளக்கும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

மணி மார்பின் வலது புறத்தில் லட்சுமி தேவியின் இருப்பிடம் முக்கோண வடிவில் காட்டப்பட்டுள்ளது. மேல் கரங்களில் சங்கு சக்கரம், வில் அம்பு, கத்தி கேடயம் முதலியவற்றைத் தாங்கியுள்ளார். வலது கீழ் கரம் கதாயுதத்தையும், இடது மேல் கரம் தூக்கிய காலைப் பிடித்தபடியும் உள்ளது.

தூக்கிய காலின் பாதப்பகுதியும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை என்ன சொல்லிப் பாராட்ட?

தலைக்கு மேல் யாளியின் முகத்துடன் கூடிய திருவாசி போன்ற அமைப்பு அழகாக இருக்கிறது. தூணில் இறைவனின் இடதுபுறம் வாமனர் அவதாரமும், மகாபலி சக்கரவர்த்தி தானம் செய்யும் காட்சியும் சிறிய அளவில் காட்டப்பட்டுள்ளது சிறப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x