Published : 22 Dec 2020 08:01 AM
Last Updated : 22 Dec 2020 08:01 AM

சேதி தெரியுமா?

தொகுப்பு: மிது 

டிச.8: சாங் ஆ-5 என்ற தானியங்கி விண்கலத்தின் மூலம் நிலவில் சீனா தன் நாட்டுக் கொடியைப் பறக்கவிட்டுள்ளது. அமெரிக்காவுக்குப் பிறகு நிலவில் கொடியைப் பறக்கவிடும் நாடு சீனா.

டிச.9: இமயமலை சிகரத்தின் புதிய உயரம் 8848.86 மீட்டர் என நேபாளமும் சீனாவும் கூட்டாக அறிவித்துள்ளன. இது முந்தைய அளவைவிட 0.86 மீட்டர் கூடுதல்.

டிச.10: மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோட்டை நகரங்களான அவுர்ச்சா, குவாலியர் ஆகியவை யுனேஸ்கோ மரபு நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் அவுர்ச்சா 16-ம் நூற்றாண்டில் பந்தேலா பேரரசின் தலைநகரமாகும். குவாலியர் நகரம் 9-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

டிச.11: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்தார்.

டிச.12: சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியில் விலங்கு உடல் பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளதன்மூலம் அந்த நாகரிக மக்களிடம் இறைச்சி உணவுப் பழக்கம் இருந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டிச.14: தமிழக அரசு ‘அம்மா சிறு மருத்துவமனை’ என்ற திட்டத்தை தொடங்கியது. இதன்படி 2,000 சிறு மருத்துவமனைகள் செயல்படும்.

டிச.16: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ராவந்தவாடி கிராமத்தில் உள்ள அம்மாகுளம், அரியலூரில் அழகர் மலை கிராமத்தில் உள்ள யானை சிலை ஆகியவை பாதுகாக்கப்பட்ட நினைவுசின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை 16-17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

டிச.17: 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.-01 (CMS-01) என்கிற இந்தியாவின் 42-வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. நீட்டிக்கப்பட்ட-சி பேண்ட் சேவைகளை இந்தச் செயற்கைக்கோள் வழங்கும்.

டிச.19: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே, டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் மிகவும் குறைந்தபட்ச ரன். முன்னதாக 1974-ல் இங்கிலாந்துக்கு எதிராக 42 ரன் எடுத்ததே குறைந்தபட்ச ரன்னாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x