Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM

கரோனாவுக்கு மாதுளை தோல் பலன் அளிக்குமா?

கோவிட் தொற்றைத் தடுப்பதில் மாதுளை தோல் சாறுக்கு இருக்கும் பங்கு குறித்த ஓர் ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. ’சார்ஸ்-கோவ்-2 வைரஸ் தடுப்பான்களாக மாதுளை தோல் சாறுகளில் உள்ள பாலிபீனால்கள்’ என்ற தலைப்பிலான ஆய்வு, மாலிகுலர் செல்லுலார் பயோ கெமிஸ்டிரி மருத்துவ இதழின் சமீபத்திய பதிப்பில் வெளியிடப்பட்டது. இந்த ஆராய்ச்சிக்கு போஸ்னியா, ஹெர்சகோவினாவின் பன்ஜா லூகா பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறையைச் சார்ந்த ரெல்ஜா சுருசிக் தலைமை வகித்தார்.

நாவல் கரோனா வைரஸின் விளைவுகளைத் தடுக்கக்கூடிய பல பண்புகள் மாதுளையின் தோலில் இருப்பதால், அதை ஆராய முடிவெடுக்கப்பட்டது. அழற்சி எதிர்ப்பு விளைவுகள்; ஆக்ஸிஜனேற்ற விளைவுகள்; ரத்தச் சர்க்கரைக் குறைவு அல்லது ரத்த சர்க்கரையைக் குறைக்கும் விளைவுகள்; லிப்பிட்டைக் குறைப்பது அல்லது கொழுப்பைக் குறைக்கும் விளைவுகள்; ஆன்டிஹைபர்டென்சிவ் அல்லது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் விளைவுகள்; ஆன்டிமைக்ரோபியல் விளைவுகள் உள்ளிட்டவை ஆராயப்பட்டன.

புனிகலாஜின், புனிகலின் போன்ற மாதுளை தோல் சாறின் கூறுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட புரத இலக்குகளுடன் தொடர்புகொள்வதில் குறிப்பிடத்தக்கத் திறனை வெளிப்படுத்துகின்றன. இதனால் மனித செல்களுக்குள் வைரஸ் நுழைவது தடுக்கப்படுகிறது. புனிகலாஜின், புனிகலின் தொடர்பான ஆய்வுகள் நாவல் கரோனா வைரஸ் எதிர்ப்பில் நம்பிக்கை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

“இன்ஃபுளூயன்ஸா வைரஸ், ஹெர்பஸ் வைரஸ், போக்ஸ் வைரஸ்கள், மனித நோயெதிர்ப்புக் குறைபாடு வைரஸ்” போன்ற வைரஸ்களுக்கு எதிராக மாதுளை சாறு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

- நிஷா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x