Last Updated : 31 Oct, 2015 12:23 PM

 

Published : 31 Oct 2015 12:23 PM
Last Updated : 31 Oct 2015 12:23 PM

பாலம் அமைக்கும் ராட்சத இயந்திரம்

நாகரிகம் வளர வளர நகர அமைப்புகள் உண்டாயின. மனிதன் காட்டை அமைத்து நாட்டைக் காட்டினான். தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத சாலைகள் உருவாகின. ஊர்களை இணைக்கும் சாலைகள், விரிந்தன. காடுகளை, மலைகளை, ஆறுகளைத் தாண்டி வெகு தூரம் வரை சாலைகள் நீண்டன.

சாலைகள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் இருந்திருக்கின்றன என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். 5000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சாலைகள் இன்றும் எகிப்தில் உள்ளன. சாலைகள் அமைப்பதில் புதிய புதிய யுக்திகள் 19-ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் உருவாயின. 20-ம் நூற்றாண்டில் அந்த யுக்திகள் தொழில் நுட்பத்தின் உதவியால் வலுப்பெற்றுப் பரவலான பயன்பாட்டுக்கு வந்தன.

அவற்றுள் ஒன்று பாலம் அமைக்கும் முறை. ஆற்றைக் கடக்கும் பாலங்கள், ரயில்வே பாலங்கள், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பாலங்கள் எனப் பல்வகைப் பாலங்கள். இந்த 21-ம் நூற்றாண்டில் பயணங்கள் எளிதாவதற்கான காரணங்களில் இம்மாதிரியான பாலங்களின் பங்கும் உண்டு. இந்தப் பாலத்தை வடிவமைப்பதுக்கு சீனாவைச் சேர்ந்த நிறுவனம் புதிய இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளது.

பீஜிங் வாவ்ஜாயிண்ட் என்னும் இயந்திரத் தயாரிப்பு நிறுவனம் இந்தப் புதிய இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. SLJ900/32 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரம் 580 டன் எடையுள்ளது. 300 அடி நீளமும் கொண்டது. தூண்களுக்கு இடையிலான தூலங்களை ஒரு நொடிக்குள் தானாக இயங்கிப் பொறுத்திவிடுகிறது இந்த இயந்திரம். சொற்ப வேலையாட்களே தேவைப்படுவார்கள். ஒரு நாளைக்குள் இந்த இயந்த்திரத்தைக் கொண்டு மிக நீண்ட பாலங்களை அமைத்துவிட முடியும் என அந்நிறுவனத் தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். உலகமெங்கும் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இயந்திரத்தின் இயங்கு முறையை கீழே பார்க்கலாம்