Published : 07 Sep 2015 10:06 AM
Last Updated : 07 Sep 2015 10:06 AM

ஹோண்டா வழியில் மஹிந்திரா

ஸ்கார்பியோ, பொலெரோ என பிரமாண்டமான எஸ்யுவி கார்கள் மூலம் பிரலமாகத் திகழும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா இப்போது முதல் முறையாக அமெரிக்காவில் தடம் பதிக்கிறது.

பிரம்மாண்ட கார்கள் மற்றும் சீறும் ஜீப்புகளைத் தயாரிக்கும் மஹிந்திரா நிறுவனம் அமெரிக்காவில் இரு சக்கர வாகன அறிமுகம் மூலம்தான் அடியெடுத்து வைத்துள்ளது.

அதுவும் பேட்டரியில் தயாரிக் கப்பட்ட ஜென்ஸே எனும் ஸ்கூட்டரை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி யுள்ளது மஹிந்திரா.

இத்தாலிய நிறுவனத் தயாரிப்பான வெஸ்பா ஸ்கூட்டரைப் போன்ற தோற்றத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத ஸ்கூட்டரை தயாரித்து சுமார் 3 ஆயிரம் டாலர் விலையில் விற்பனைக்கு விட்டுள்ளது மஹிந்திரா.

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஒரேகான், மிச்சிகன் மாகா ணங்களில் இப்போது ஜென்ஸே ஸ்கூட்டர்களைப் பார்க்கலாம்.

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரி கார்களின் உபயோகம் இப்போது அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் பிரபலமாகி வருகிறது. பெரும்பாலான ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் பேட்டரி கார்களை அறிமுகப்படுத்தி வரு கின்றன.

டெஸ்லா இன்கார்ப்பரேஷன் நிறுவனம் நஷ்டம் ஏற்பட்டாலும் தொடர்ந்து இத்தகைய கார்களை தயாரித்து வருகிறது.

அருகிலுள்ள பகுதிகளுக்கு கார்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கும் போக்கும் அமெரிக்கர் களிடையே அதிகரித்து வருகிறது. அருகாமையிலுள்ள அங்காடிகள், பொழுது போக்கு மையங்களுக்குச் செல்வதற்கு கார்களுக்குப் பதிலாக ஸ்கூட்டரைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இ-ஸ்கூட்டரின் உபயோகம் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் மஹிந்திராவின் ஜென்ஸே அமெரிக்க நகரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதில் வியப்பில்லை.

1970-களில் இதேபோலத்தான் இரு சக்கர வாகனங்களை அமெரிக்காவில் அறிமுகம் செய்தது ஹோண்டா. பின்னர் கார்கள், எஸ்யுவி-க்கள் என அமெரிக்க சந்தையை ஆக்கிரமித்தது.

இதே பாணியில் இப்போது மஹிந்திரா நிறுவனமும் ஜென்ஸே மூலம் அமெரிக்காவில் அடியெடுத்து வைத்துள்ளது.

இதற்கு முன்பு பேட்டரி ஸ்கூட்டர்கள் அமெரிக்காவில் அவ்வளவாக பிரபலமாகவில்லை. பெரும்பாலும் கார்களை உபயோகிப்பவர்கள்தான் அதிகம். இப்போது சுற்றுச் சூழல் மாசு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், கார்களை பகிர்ந்து கொண்டு பயணம் செய்வது, பெரும்பாலும் பொது போக்குவரத்து வசதியைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கையில் அமெரிக்கர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க சந்தையில் நுழைய மஹிந்திரா நிறுவனம் முயன்றபோது அங்கு இந்நிறுவனத் தயாரிப்புகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி மஹிந்திரா ஸ்கூட்டர்கள் நிராகரிக் கப்பட்டன.

ஆனால் தற்போது சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால் அதே மஹிந்திரா ஸ்கூட்டரை மக்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர். அமெரிக்க வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டதாக தலைமை வடிவமைப்பாளர் டெரன்ஸ் டன்கன் தெரிவித்துள்ளார்.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள தகவல் தொழில்நுட்ப வல்லு நர்களுக்குப் பயன்படும் வகையில் இருக்கையின் கீழ் பகுதியில் லேப் டாப் சார்ஜ் செய்யும் வசதியோடு இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சான் பிரான்சிஸ்கோ, போர்ட்லாண்ட் ஆகிய பகுதிகளில் விற்பனையகங்களைத் திறந்துள்ளது மஹிந்திரா.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x