

இந்த ஆண்டின் அக்டோபர் டிசம்பர் காலகட்டத்தில் ஆட்களை வேலைக்கு எடுப்பதற்கான நல்ல திட்டங்களைத் தொழில் நடத்துபவர்கள் வைத்துள்ளனர். தொழிலின் மீது அரசாங்கத்தின் கவனம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து மேன் பவர் குரூப் எனும் நிறுவனம் ஒரு சர்வே எடுத்துள்ளது.
இந்த ஆய்வு இந்தியா முழுதும் உள்ள 5047 தொழில் நடத்துபவர்களிடம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் டிசம்பர் காலகட்டத்தில் ஆட்களை வேலைக்கு எடுப்பது நல்லமுறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் 41 சதவீத வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைக்கு ஆட்கள் எடுப்பதில் தொடர்கிற இந்த சாதகமான மனநிலை வேலை தேடுவோர்களுக்கு நல்ல பயன்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ தொழில் நடத்துவதை எளிதாக்குவதில் அரசு மேலும் கவனம் செலுத்துவதால் பல பெரும் நிறுவனங்கள் மூலதனம் போடுவதற்கான நல்ல சூழல் இருப்பதை உணர்கின்றன. இது வேலை வாய்ப்புகளையும் தொழில் வளர்ச்சியையும் ஏற்படுத்தும்” என்கிறார் மேன் பவர் குரூப் இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் ஏ.ஜி.ராவ்.
வேலைக்கு ஆட்கள் எடுக்கிற திட்டங்கள் பெரும்பாலும் மின்-வணிகத்தில் உள்ள பெரும் நிறுவனங்களால் போடப்படுகின்றன. குறிப்பாக, பொறியாளர்களும் தொழில்நுட்ப நிபுணர்களும் வேலைக்கு எடுக்கப்படுவார்கள் என்கிறார் அவர்.
இந்த வேலைவாய்ப்புகள் உருவாகிற இடங்களாக மொத்த வணிகம், சில்லறை வணிகம், போக்குவரத்து , உபயோகப் பொருள்கள் துறை, ஆகிய துறைகள் அடையாளம் இருக்கும். அவற்றில் சுமார் 45 சதவீத அளவுக்கு ஆட்கள் வேலைக்கு எடுக்கப்படலாம்.
எந்தப் எந்த பகுதிகளில் வேலைவாய்ப்புகள் உருவாகலாம் என்று கணித்ததில் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் 42 சதவீத வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம் எனத் தெரிகிறது.
வேலை தேடுபவர்களுக்கான சந்தையின் உலகளாவிய போக்கும் நல்லமுறையிலேயே இருக்கிறது. இருந்தாலும் பொருளாதார மந்தத்திலிலுருந்து உலகத்தின் பொருளாதாரம் விடுபடுவது மெதுவாகவே நடப்பதால் மேலும் அர்த்தமுள்ளதாகப் பொருளாதார மீட்சி இருக்கும்வரை மிக வேகமான முறையில் ஆட்களை வேலைக்கு எடுக்கவேண்டாம் என்னும் போக்கும் அனேகத் தொழில்நிறுவனங்களிடம் இருக்கவே செய்கிறது.
வேலைக்கு ஆட்கள் எடுக்கிற போக்கு உலகளாவிய அளவில் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்தால் இந்தியாவும் தாய்வானும் வேலைக்கு ஆட்கள் எடுப்பதில் தீவிரமாக இருக்கின்றனர். அமெரிக்காவில் இந்தப் போக்கு சீரடைந்துவருகிறது. தற்போதைய போக்கு 2007 காலகட்டத்தில் இருந்ததைவிட சிறப்பாக இருக்கிறது. பிரேசிலிலும் சீனாவிலும் வேலை வாய்ப்புகளின் சந்தை மெதுவாகக் குறைந்தே வருகிறது. ஆறாண்டுகளுக்கும் மேலாக இந்த நாடுகளில் வேலைக்கு ஆட்கள் எடுப்பது பலவீனமாகவே இருக்கிறது.
இத்தாலி,கிரீஸ், பிரான்ஸ், பின்லாந்து ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்புகள் பின்னடைந்துள்ள எதிர்மறை போக்கு நீடிக்கிறது.