Published : 30 Jul 2020 09:12 AM
Last Updated : 30 Jul 2020 09:12 AM

சித்திரப் பேச்சு: துன்பத்தைத் துரத்தும் திருக்கோட்டியூர்

ஓவியர் வேதா

அனைத்து மக்களும் வைகுண்டம் செல்ல எட்டு எழுத்து மந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்பதை ராமானுஜர் இக்கோயிலின் கோபுரத்தின் மீது ஏறித்தான் ஓதினார். இந்த சௌமிய நாராயணர் உற்சவர் விக்கிரகம் தேவேந்திரனால் கதம்ப மகரிஷிக்கு வழங்கப்பட்ட சிறப்பைப் பெற்றது.

இரணியனைக் கொல்ல தேவர்களோடு ஆலோசித்த இடமும், மேலும் நரசிம்ம அவதாரம் செய்யப்போவதாக அறிவித்து தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் காட்டியருளிய திருத்தலமும் கூட. நவக்கிரகங்களில் ஒருவராகிய புதன் பகவானின் புதல்வன் புரூருவன் உருவாக்கிய தலம் என்று கூறப்படுகிறது. இத்தலம் அஷ்டாங்க விமான அமைப்பைக் கொண்டது. எம்பெருமான் இங்கு நான்கு விதமான கோலத்தில் சேவை சாதிக்கிறார். கீழ்த் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோகம் பெருமாள்).

முதல் தளத்தில் சயனக்கோலத்தில் சௌமிய நாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்) இரண்டாம் தளத்தில் நின்ற கோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோகப் பெருமாள்) மூன்றாம் தளத்தில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்டப் பெருமாள்).

இத்தலத்தில் தாயாரின் திருநாமம் நிலமாமகள் என்பதாகும். அஷ்டாங்க விமானத்தில் நரசிம்மரும், அருகே ராகு கேதுவும் உள்ளனர். தேவர்களின் திருக்கை(துன்பம்) ஓட்டியதால் திருக்கோட்டியூர் என்று பெயர் பெற்றது. இத்திருக்கோயிலில் நுழைந்ததும் முன்பு எங்கும் இல்லாதபடி சுயம்புலிங்க மூர்த்தியாக சிவ லிங்கம் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். பல பெருமைகளைக் கொண்ட இத்திருத்தலம் ஒன்பதாம் நூற்றாண்டில் வரகுணப் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x