Published : 03 Jun 2020 09:33 AM
Last Updated : 03 Jun 2020 09:33 AM

பாடல்: கரோனா நாட்கள்

வெளியே போனா போடறோம் மாஸ்க்கு
வீட்டிலேயே இருக்குறதுதான் எங்களுக்கு டாஸ்க்கு

பள்ளிகளில் தேர்வு வைக்காமலே போட்டாங்க பாசு
வேகமா குறையுது வீட்டில் சேமிச்ச காசு

அப்போலாம் அடிக்கடி போவோம் ஸ்கூட்டி ரைடு
இப்போ எட்டிக்கூடப் பாக்குறதில்லை ரோடு சைடு

நமக்கு இந்த வருஷம் நல்லா இல்ல டைம்
எல்லாருக்கும் வந்துடுச்சு கரோனா பயம்

கொண்டு வந்தாங்க புது ஆப்
எங்க போனாலும் விடணும் ஒரு மீட்டர் கேப்

கால் பண்ணினா இருமல் சத்தம் கேக்குது போன்ல
அடிக்குற வெயிலுக்கு காத்தே வரல ஃபேன்ல

இந்நேரம் போட்டிருப்பாங்க ஐபிஎல் ஃபைனல் டாஸ்
இந்த கரோனாவால ஏகப்பட்ட பேருக்கு லாஸ்

இப்படியே முடியப் போகுது எங்க வெகேஷன்
எங்களுக்கு வீடு மட்டும்தான் ஒரே லொகேஷன்

மருந்து அடிக்கிறாங்க கேட்டுல
மனித நடமாட்டமே இல்ல ரோட்டுல

பொருளாதாரம் சரியுது நாட்டுல
நாங்க பூட்டி கிடக்குறோம் வீட்டுல

- சு. மாயா, 11-ம் வகுப்பு, பெருங்குடி, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x