Published : 27 May 2020 08:51 AM
Last Updated : 27 May 2020 08:51 AM

விளையாட்டு: நாம் வெல்வோம்... நாம் வெல்வோம்...

விளையாட்டுடன் ‘என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது’ என்பதையும் தெரிந்துகொண்டு, கவனமாக இருந்து, கரோனாவி லிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வோம். இறுதி வெற்றி நமக்கே!

2 முதல் 4 பேர் வரை விளையாடலாம். ஆளுக்கு ஒரு வண்ண பட்டன்களை எடுத்துக்கொள்ளுங்கள். தாயம் போட்டு ஆரம்பிக்க வேண்டும். யார் முதலில் 100-க்குச் செல்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர்.

எப்படி விளையாடுவது?

2. கைகளை அடிக்கடி சோப்பு நீரில் கழுவுகிறீர்கள். 23-ம் கட்டத்துக்குச் செல்லுங்கள்.

6. வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்கிறீர்கள். பாராட்டுகள். 45-ம் கட்டத்துக்குச் செல்லுங்கள்.

20. ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுகிறீகள். 59-ம் கட்டத்துக்குச் செல்லுங்கள்.

30. பக்கத்து வீட்டுக்குச் செல்கிறீர்கள். 16-ம் கட்டத்துக்குத் திரும்பிச் செல்லுங்கள்.

37. முகத்தை மறைக்காமல் இருமுகிறீர்கள். 3-ம் கட்டத்துக்குச் செல்லுங்கள்.

56. கடைவீதிக்குச் செல்கிறீர்கள். 8-ம் கட்டத்துக்குத் திரும்புங்கள்.

52. தினமும் குளித்து, துவைத்து தூய்மையாக இருக்கிறீர்கள். 72-ம் கட்டத்துக்குச் செல்லுங்கள்.

57. வீட்டைத் தூய்மையாக வைத்திருக்கிறீர்கள். 96-ம் கட்டத்துக்கு முன்னேறுங்கள்.

74. வீட்டில் இருப்பவர்களிடமும் இடைவெளியைக் கடைப்பிடிக்கிறீர்கள். 94-ம் கட்டத்துக்குச் செல்லுங்கள்.

78. கரோனாவுக்கு எதிரான அத்தனை பாதுகாப்பு விஷயங்களையும் சரியாகச் செய்கிறீர்கள். பாராட்டுகள்! 98-க்குச் செல்லுங்கள்.

84. முகம் துடைத்த துணியைத் தனியாகத் துவைக்கவில்லை. 64-ம் கட்டத்துக்குச் செல்லுங்கள்.

87. பக்கத்து வீட்டு நண்பர்களுடன் விளையாட்டு. 31-ம் கட்டத்துக்குத் திரும்பிச் செல்லுங்கள்.

98. வாய்க்குள் விரல்களை வைத்துவிட்டீர்கள். 40-ம் கட்டத்துக்குச் செல்லுங்கள்.

100. கரோனாவுக்கு எதிரான போரில் கவனமாகச் செயல்பட்டால், இறுதி வெற்றி நமக்கே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x