Published : 29 Apr 2020 05:43 PM
Last Updated : 29 Apr 2020 05:43 PM

ஊழல் கண்காணிப்பு ஆணையராக சுரேஷ் படேல் பதவியேற்பு

சுரேஷ் என். படேல்

புதுடெல்லி

ஊழல் கண்காணிப்பு ஆணையராக சுரேஷ் என். படேல் இன்று பதவியேற்றார்.

தனிநபர் இடைவெளி விதிகளைப் பின்பற்றி, ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையர் சஞ்சய் கோத்தாரி, காணொலி மூலம் அவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஷரத்குமார், ஊழல் கண்காணிப்பு ஆணையர், செயலாளர் மற்றும் ஆணையத்தின் இதர மூத்த அதிகாரிகள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

வங்கித் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர் படேல். ஆந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸின் செயல் இயக்குநர் ஆகிய பதவிகளை வகித்தவர்.

இந்திய வங்கிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும்; ஊரக வளர்ச்சிக்கான வங்கியாளர்கள் நிறுவனம், நபார்டு உறுப்பினராகவும்; மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு, ஆந்திரப்பிரதேசப்பகுதி தலைவராகவும்; ஊரக மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான வங்கியாளர்கள் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டணங்கள் மற்றும் தீர்வு அமைப்புகளின் ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்புக் குழுவின் (BPSS) நிரந்தர அழைப்பாளராகவும், வங்கிகள் மற்றும் நிதி மோசடிகள் ஆலோசனைக் குழுவின் (ABBFF) உறுப்பினராகவும் இருந்துள்ள இவர், தற்போது ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x