Published : 24 Mar 2020 09:48 AM
Last Updated : 24 Mar 2020 09:48 AM

கரோனோ வைரஸ் எங்கிருந்து வரும்?

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் எந்த ரூபத்தில் நம்மை வந்து தாக்கும் என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது. ஆனால், எந்த வடிவில் அது நம்மிடம் வந்து சேரும் என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடியும். அந்த வகையில் எந்தெந்த வழியாக கரோனா வைரஸ் உங்களைத் தாக்கும் என்பதற்கான முன்னெச்சரிக்கை:

மேற்கண்டவற்றைத் தொடும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். குறைந்தபட்சம் 2 - 4 வாரங்களுக்கு இதைக் கடைபிடிப்பது மிகவும் அவசியம். கரோனா வைரஸ் என்ற கோவிட்-19ஐ இந்தியாவுக்குள் முழுமையாகப் பரவாமல் தடுப்போம்.

கையை மாற்றிப் பயன்படுத்துங்கள்!

கைப்பிடிகள், கதவுகள், பயணங் களின்போது தொடும் இடங்கள், கழிப்பறைகள் போன்ற இடங்களை அதிகம் பயன்படுத்தாத கையால் தொடலாம். (உதாரணமாக வலது கை பழக்க உள்ளவர்கள் இடது கையால் தொடலாம்). பொதுவாக அதிகம் பயன்படுத்தும் கையாலேயே முகத்தைத் தொடுவோம்.

இனி சிறிது காலத்துக்கு கையை மாற்றி தொடுவோம். இது கொஞ்சம் கடினமான பழக்கம்தான் என்றாலும், தென் கொரியாவில் குறைந்த காலத்தில் இந்தப் பழக்கத்தைக் கடைபிடித்து கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x