Published : 16 Mar 2020 08:59 AM
Last Updated : 16 Mar 2020 08:59 AM

வேற லெவல் வெர்னா

பிஎஸ் 6 இன்ஜினுடன் வரும் புதிய ஹுண்டாய் வெர்னா தோற்றத்திலும் பல மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. புதிய கிரில் அமைப்பு, கவர்ச்சிகரமான டூயல் டோன் அலாய் வீல்கள், புத்தம் புதிய டெயில் லைட் கிளஸ்டர்கள் ஆகியவை உள்ளன. ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், டெயில் லைட்டுகள் என அனைத்துமே எல்இடியாக மாற்றப்பட்டுள்ளன.

9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம், இதனுடன் ஹுண்டாயின் புளுலிங்க் கனெக்ட்டிவிட்டியும் கொடுக்கப்படுகிறது. இந்த புளுலிங்க் கனெக்ட்டிவிட்டி செயலி மூலம் ஸ்மார்ட்ஃபோனிலிருந்தே கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்வது, ஏசியைக் காரில் ஏறும் முன்பே ஆன் செய்வது, காரின் இருப்பிடத்தை கண்டறிவது, நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளைப் பெறலாம்.

இவைதவிர செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. புதிய வெர்னாவில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வர உள்ளன.

இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும், டீசல் இன்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டார்க் கன்வெர்ட்டர் வகையிலான ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வர உள்ளது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x