Last Updated : 01 Aug, 2015 12:32 PM

 

Published : 01 Aug 2015 12:32 PM
Last Updated : 01 Aug 2015 12:32 PM

குழந்தைகள் அறையைப் புதுப்பிக்கும் வழிகள்

கார்ட்டூன் கதாபாத்திரங்களின் ஸ்டிக்கர்களாலும், வால்பேப்பர்களாலும் மட்டுமே வடிவமைக்கப்பட்டு வந்த குழந்தைகளின் அறை அலங்காரம் இப்போது பல புதுமையான மாறுதல்களை அடைந்திருக்கிறது. தரையில் ஆரம்பித்து, கட்டில், சுவர்கள், அலமாரிகள், கூரை என குழந்தைகள் அறையின் எல்லா அம்சங்களையும் கற்பனைத் திறனுடன் வடிவமைக்க முடியும். அதற்கான வழிகள்...

வண்ணங்களே எல்லை

குழந்தைகள் வண்ணங்களின் பிரியர்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதனால், வண்ணங்களால் அலங்கரிக்கலாம் என்று தீர்மானித்த பிறகு யோசிக்காமல் அதைச் செயல் படுத்துங்கள். பிங்க் வண்ண சுவர்கள், பச்சை வண்ண நாற்காலிகள், ஆரஞ்சு நிற மெத்தைகள் என கலவையான வண்ணங்களிலும் உங்கள் குழந்தையின் அறையை வடிவமைக்கலாம்.

கருப்பு வெள்ளை

குழந்தைகள் அறையை கருப்பு, வெள்ளை யிலும் அலங்கரிக்கலாம். கருப்பு வெள்ளைக் கோடுகளாலான சுவர்கள், ‘கிராஃபிக்’ கட்டில், எண் அலங்காரம், குஷன் இருக்கைகள் என அறையின் முக்கியமான அம்சங்களை கருப்பு வெள்ளையில் வடிவமைக்கலாம். முழுவதுமாக கருப்பு, வெள்ளையில் இல்லாமல் சில வண்ணங்களையும் இணைக்கலாம். உதாரணத்துக்கு, அறையின் திரைச்சீலைகளை மட்டும் பளிச் வண்ணங்களில் அமைக்கலாம்.

பொம்மைகளின் அணிவகுப்பு

மிதக்கும் அலமாரிகளில் உங்கள் குழந்தையின் பொம்மைகளை அடுக்கி வையுங்கள். இது உங்கள் குழந்தையின் அறையில் பொம்மை கண்காட்சி வைக்கப்பட்டிருக்கும் உணர்வை ஏற்படுத்தும். பொம்மை கார்கள், விலங்குகள் என உங்கள் குழந்தைக்குப் பிடித்த பொம்மை சேகரிப்பிலிருந்து இதை உருவாக்கலாம்.

பெட்டிகள் முக்கியம்

குழந்தைகளின் பொருட்களை அடுக்கிவைப்பது என்பது அவ்வளவுச் சுலபமானதல்ல. சின்னச் சின்ன விளையாட்டுப் பொருட்களை மூடியுடன் இருக்கும் பிளாஸ்டிக் பெட்டிகளில் போட்டு குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் அடுக்கி வைக்கலாம்.

புதிர் விளையாட்டுகள்

புதிர் விளையாட்டுகளின் துண்டு களைத் தொலைத்துவிடுவது குழந்தை களின் வழக்கம். இந்தப் புதிர்த் துண்டு கள் தொலையாமல் இருக்க ஒரு பெட்டியில் புதிர்த் துண்டுகளைப் போட்டு வைக்கும்படி குழந்தைகளிடம் சொல்லலாம். அவர்களிடம் அந்தப் பெட்டியைக் கொடுத்துவிடுவதால் கூடுமானவரை தொலையாமல் பார்த்துக்கொள்வார்கள்.

கிராஃப்ட் கார்னர்

உங்கள் குழந்தைக்கு கிராஃப்ட் டில் ஆர்வமிருந்தால், அவர்கள் அறையின் மூலையில் ஒரு கிராஃப்ட் கார்னரை உருவாக்கலாம்.

ஊஞ்சல் உற்சாகம்

குழந்தைகள் அறைக்குள் தூங்கும் நாற்காலிகள் அமைப்பில் இருக்கும் ஊஞ்சல்களை அமைப் பது நல்லது. இந்த ஊஞ்சலை உங்கள் குழந்தையின் ரசனைக்கு ஏற்ற வகையில் அவர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகு அமைப்பது முக்கியம்.

படப்புத்தக அலமாரிகள்

குழந்தைகளின் பாடப் புத்தக அலமாரிகளை அடுக்கி வைப்பதில் சிறிது கவனம் செலுத்தினால் அது அறைக்குக் கூடுதல் அழகைக் கொடுக்கும். இந்தப் பாடப் புத்தகங்களை குழந்தைகள் அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தும் இடங்களில் அலமாரிகளில் அடுக்கி வைக்கலாம். சூழலும் புத்தக அலமாரிகள் இதற்குப் பொருத்தமானதாக இருக்கும்.

கண்ணாமூச்சிக்கு இடம்

குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடும் போது ஒளிந்துகொள்வதற்காக அறையில் சில இடங்களைப் படைப்பாற்றலுடன் உருவாக்கலாம். அறையின் மூலையில் இதற்காகவே கதவிருக்கும் அலமாரியை வித்தியாசமான முறையில் உருவாக்கலாம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x