Published : 17 Feb 2020 09:50 AM
Last Updated : 17 Feb 2020 09:50 AM

இஎல்எஸ்எஸ் – வரி சேமிப்பு & நிதியை அதிகரிக்கும் திட்டம்

பி.ரமணன், சிஇஓ - வெல்த் கிரியேட்டர்ஸ்

பொதுவாகவே மக்களுக்கு பல செயல்களைப் புரியும் ஒரு சாதனம் இருந்தால் அதன் மீது ஈர்ப்பு அதிகம் இருக்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஸ்விஸ் ராணுவ கத்தி, போர்ட்டபிள் ரேடியோ, ஸ்டீரியோ பிளேயர் ஆகியவற்றைக் கூறலாம். அதேபோல முதலீடு என்று வரும்போது சில்லரை முதலீட்டாளர்கள் அல்லது சிறு முதலீட்டாளர்கள் பெரும்பாலும் எதிர்நோக்குவது பன்முக செயல்பாடுகளைக் கொண்ட நிதித் திட்டங்களைத்தான். அதிலும் குறிப்பாக இரண்டு பிரதான இலக்குகளை நிறைவேற்றுபவையாக அவை இருக்க வேண்டும். வருமான வரி சேமிப்புக்கு உதவுவதாகவும், சேமிப்பு தொகை பன்மடங்கு பெருகுவதாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்படுகிறது.

தொழில்நுட்ப ரீதியில் கூற வேண்டுமென்றால் பங்குச் சந்தையுடன் இணைந்த சேமிப்பு திட்டங்கள் அல்லது இஎல்எஸ்எஸ். இத்தகைய பரஸ்பர நிதி திட்டங்கள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு பெற உதவுகின்றன. அதேசமயம் நீண்டகால அடிப்படையில் அதாவது கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 3 ஆண்டு காலத்திலும் இவை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டுகின்றன என்பதுதான் இவற்றின் சிறப்பம்சமாகும்.

இஎல்எஸ்எஸ் பெரும்பாலும் சந்தையுடன் இணைந்த பரஸ்பர முதலீட்டுத் திட்டங்களாகும். இதில் திரட்டப்படும் நிதியில் 80 சதவீதம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகின்றது. அதிலும் குறிப்பாக வளர்ச்சி வாய்ப்புள்ள பங்குகளில் முதலீடு செய்யப்படுகின்றது. இஎல்எஸ்எஸ் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வருமானவரி சட்டம் பிரிவு 80(சி) பிரிவின் கீழ் வருமான வரி விலக்காக ஒரு நிதி ஆண்டில் ரூ.1.50 லட்சம் வரை பெறலாம். இஎல்எஸ்எஸ் முதலீடு மேற்கொள்ளப்படும் பட்சத்தில் வேறு எந்த முதலீடுகளையும் மேற்கொண்டு 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெற வேண்டிய தேவை உங்களுக்கு ஏற்படாது.

இஎல்எஸ்எஸ் அல்லது வரி சேமிப்பு பத்திரங்கள் கடந்த காலங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு முதலீட்டை பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளன. அதற்குக் காரணம் மிகச்சிறந்த நிதி நிபுணர்கள் எத்தகைய பங்குகளில் முதலீடு செய்வது சிறந்தது என்பதை ஆராய்ந்து அதன் அடிப்படையில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனாலேயே முதலீட்டாளர்களுக்கு உத்திரவாதமான தொகை நிச்சயம் கிடைக்கிறது. மேலும் இஎல்எஸ்எஸ் நிதியானது சுழற்சி அடிப்படையில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு கட்டாயம் முதலீட்டை வைத்திருக்க வேண்டும் என்பதால் உங்கள் முதலீடு பாதுகாப்பாக உள்ளது. குறிப்பிட்ட தொகையை மீண்டும் மீண்டும் மறுமுதலீடு செய்யவும் இது வழிவகுக்கிறது. இதனால் மூன்று ஆண்டு முடிவில் குறிப்பிட்ட அளவிலான பலன் நிச்சயமாகக் கிடைக்கிறது. இதன்
மூலம் மூன்று ஆண்டு முடிவில் குறிப்பிட்ட தொகை கணிசமாக கிடைக்கிறது. இதை நீங்கள் மறுமுதலீடு செய்யலாம். மேலும் இதில் கிடைக்கும் வருமானத்தில் குறைந்தபட்ச தொகை மட்டுமே வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும். நீண்ட கால அடிப்படையிலான மூலதன ஆதாயம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை இஎல்எஸ்எஸ் மூலம் பெறப்பட்டால் அதற்கு முழு வரி விலக்கு உண்டு.

நிதித் திட்டங்களில் முதலீடு மேற் கொள்ளும் முன்பு எத்தகைய வரி சேமிப்புத் திட்டத்தை தேர்வு செய்துள்ளோம் என்பதை ஆராய்ந்து தீர்மானியுங்கள். குறிப்பாக உங்களது நிதி இலக்கை எது எட்ட உதவும் என்பதை அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள். ஒரு நிதித் திட்டத்தின் கடந்த கால செயல்பாடுகள் உங்களுக்கு அத்திட்டம் குறித்து முடி
வெடுக்க நிச்சயம் உதவும். அதேசமயம் கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்ட நிதித் திட்டங்கள் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படும் என்ற உத்தரவாதமும் கிடையாது. இதனால் உங்கள் முதலீடுகளை கூடுமானவரை பரவலாகப் பல திட்டங்களில் முதலீடு செய்வது சிறப்பானதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x