Published : 11 Jan 2020 01:22 PM
Last Updated : 11 Jan 2020 01:22 PM

நூல் பகுதி: இ.சி. என்றால் என்ன?

இந்த பதிவில் ECUMBARANCE CERIFICATE என்றும், சுருக்கமாக EC என்றும், தமிழில் வில்லங்கச் சான்றிதழ் என்று புழக்கத்தில் இருக்கிறது. இ.சி. என்பது ஒரு சொத்தில் நடந்த பரிமாற்றங்களை தேதி வாரியாக யாரிடம் இருந்து யாருக்கு உரிமை மாறி இருக்கிறது, அதனுடைய ஆவண எண் நான்குமால் எல்லை சொத்து விவரங்களை காண்பிக்கின்ற ஒரு ஆவணம்.

என்னவெல்லாம் இ.சி. யின் மூலம் தெரிந்து கொள்ளலாம்?ஒரு சொத்தின் பத்திரம் & தாய் பத்திரங்கள் உங்களிடம் விற்பனைக்கு வந்தால், அந்த ஆவணங்கள் எல்லாம் உண்மையானதா என்று இ.சி. யில் வருகிற ஆவண எண்களை , கையில் உள்ள ஆவண எண்களோடு ஒப்புமைப்படுத்தி பார்க்கலாம்.உங்களுக்கு கிடைத்து இருக்கும் ஆவணங்கள் இல்லாமல் வேறு ஆவணங்கள் அந்த சொத்து தொடர்பாக கூடுதலாக இருந்தால் அதனை தெரிந்து கொள்ளலாம் .

கிரையம், கிரையம் அக்ரிமெண்ட் , தானம், செட்டில்மெண்ட், விடுதலை பவர் பத்திரம் , அடமான கடன் பத்திரம் , போன்றவற்றை அதன் ஆவண எண் விவரங்கள் உடன் தெரிந்து கொள்ளலாம் பிளாட், வீடுகள் கட்டி கொடுக்கின்ற பில்டர்கள் , தங்களுடைய சொத்திற்கான (COMPLETION CERTIFICATE) OCCUPY CERTIFICATE, EC யில் ஏற்றி வைத்து இருப்பார்கள் , வீடு வாங்குவதற்கு முன் அதனை தெரிந்து கொள்ளலாம்.

கூட்டுறவு, வேளாண்மை சொசைட்டி, நிலவங்கியில் வாங்கி அல்லது தனியார் நிதி நிறுவனத்திடம் வாங்கி இருக்கிற கடன்களை இ.சி. மூலம் தெரிந்து கொள்ளலாம். மேற்படி சொத்தை பொறுத்து இருந்தால் நீதிமன்ற தடையாணை & உத்தரவுகள் இருந்தால் இ.சி. யில் தெரிந்து கொள்ளலாம். அரசு நில எடுப்பு , அரசு நில ஆர்ஜிதம் , போன்றவற்றை கூட சில நேரங்களில் EC யில் தெரிந்து கொள்ளலாம். கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர்

‘மின்மினிகளின் கனவுக் காலம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: gmuruganjeeva@gmail.com

நிலம் உங்கள் எதிர்காலம்
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
பிராப்தம், மதுராந்தகம், சென்னை.
தொலைபேசி: 9841665836

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x