Published : 30 Dec 2019 10:47 AM
Last Updated : 30 Dec 2019 10:47 AM

ஆம்பியரின் புதிய அறிமுகம்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் ஆம்பியர் நிறுவனம், ரியோ எலைட் என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெங்களூரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு லைசன்ஸும் தேவையில்லை; வாகனப் பதிவு எண்ணும் தேவையில்லை. 48வி-20ஏஹெச் லெட் ஆசிட் பேட்டரியை இந்த ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது.

இதன் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 55 முதல் 65 கிமீ வரை பயணக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. 250 வாட்ஸ் திறன் கொண்டிருக்கும் இதன் மோட்டர், அதிகபட்ச அளவாக மணிக்கு 25 கிமீ வேகத்தை எட்டும். விலை ரூ.45,099-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.1,999 செலுத்தி இந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x