Published : 19 Dec 2019 01:06 PM
Last Updated : 19 Dec 2019 01:06 PM

மெய்யான ஞானம்

தாங்கள் இறைவனின் மைந்தர்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கும் மக்கள் அனைவரும் மெய்யான வாழ்வைப் பெறுகின்றனர். வாழ்வைக் குறித்த புரிதலே அனைத்திற்குமான அடிப்படையாகவும் தொடக்கமாகவும் இருக்கின்றது. வாழ்வினைக் குறித்த இந்த ஞானமே கடவுள். மேலும் ஏசுவின் அறிவிப்பினால் வெளிப்பட்டிருக்கும் வாழ்வினைக் குறித்த இந்த ஞானமே அனைத்திற்குமான அடிப்படையாக அமைகிறது.

அனைத்துப் பொருட்களும் இந்த ஞானத்தின் மூலமாகவேதான் உயிர்பெற்று இருக்கின்றன. இந்த ஞானமானது இல்லையென்றால் எதுவும் உயிர்பெற்று இருக்க முடியாது. இந்த ஞானமே மெய்யான வாழ்வினை அளிக்கிறது. இந்த ஞானமே உண்மையின் ஒளியாக இருக்கின்றது. இருளிலும் அந்த ஒளியானது ஒளி வீசிக் கொண்டு இருக்கிறது. இருளினால் அதனை அணைக்க முடியாது.

மெய்யான ஒளியானது இந்த உலகினில் எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருக்கின்றது. இந்த உலகினில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனையும் அது ஞானமடைய வைத்துக்கொண்டேதான் இருக்கின்றது. ஒளியானது இந்த உலகினில் இருந்தது. ஞானத்தின் அந்த ஒளியிமைப் பெற்று இருக்கின்ற அந்தக் காரணத்தினாலேயேதான் இந்த உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த ஒளியினை இந்த உலகமானது தக்கவைத்துக் கொள்ள வில்லை. தன்னுடைய மக்களுக்காகவே அவர் இங்கே வந்தார். ஆனால் அவருடைய சொந்த மக்களே அவரைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை.

எவரெல்லாம் அந்த ஞானத்தினைப் புரிந்துகொண்டார்களோ அவர்களால் மட்டுமேதான் உலகிற்கு வந்த அந்த ஒளியானவரைப் போன்று ஆகமுடிந்தது. ஏனென்றால் அவர்கள் அந்த ஒளியானவரின் மெய்த்தன்மையை நம்புகின்றனர். எவரெல்லாம் வாழ்வானது ஞானத்திலேயே அடங்கி இருக்கின்றது என்பதில் நம்பிக்கை கொண்டு இருந்தார்களோ அவர்கள் மாமிசத்தின் மைந்தர்களாக இருந்த நிலையினில் இருந்து விலகி ஞானத்தின் மைந்தர்களாக ஆகினர்.

மேலும், ஞானத்துக்குரிய வாழ்வானது ஏசு கிறிஸ்துவின் வாயிலாக தன்னைத்தானே மனித உருவில் வெளிப்படுத்தியது. அவ்வாறு வெளிப்படுத்தியதன் அர்த்தத்தை நாம் புரிந்துகொண்டுள்ளோம். ஞானத்தின் மைந்தனாக மாமிசத்தினில் வந்திருக்கின்ற இவர், வாழ்வின் மூலமாக இருந்து கொண்டிருக்கின்ற தந்தையினைப் போன்றே இருக்கின்றார். மேலும் அவர் எப்பொழுதும் தந்தையுடனும் இருக்கின்றார். இதனை நாம் புரிந்துகொண்டுள்ளோம்.

ஏசுவின் போதனைகளை முழுமை யானதும் மற்றும் மெய்யானதுமாக இருக்கின்ற நம்பிக்கைகளாகும். ஏசுவின் போதனைகளை நிறைவேற்றுவதன் மூலமாக நாம் நம்முடைய பழைய நம்பிக்கைகளுக்குப் பதிலாகப் புதிதான ஒரு நம்பிக்கையினைப் புரிந்துகொள்கின்றோம். மோசே நமக்கு ஒரு சட்டத்தினை வழங்கினார். ஆனால், நாம் மெய்யான நம்பிக்கையினை ஏசுவின் மூலமாகவே பெற்றுக்கொண்டோம்.

யாரும் கடவுளைக் கண்டது கிடையாது. கடவுளை இனிமேல் காணப் போவதும் இல்லை. தந்தையுடன் ஒன்றாக இருக்கும் அவருடைய மைந்தரே நமது வாழ்வுக்கு உரிய பாதையைக் காட்டி இருக்கின்றார்.

12 சுவிசேஷ அத்தியாயங்களின் அர்த்தங்கள்

1 மனிதன் என்பவன் ஆதியும் அந்தமுமற்ற ஒரு மூலத்தின் மைந்தன் ஆவான். மாமிசத்தின்படி அல்லாது ஆவியின்படியே அவன் அத்தந்தைக்கு மைந்தனாவான்.
2 ஆதலால் மனிதன் ஆவியின்படியே அத்தந்தைக்குச் சேவையினைச் செய்ய வேண்டும்.
3 அனைத்து மக்களின் வாழ்வும் ஒரு தெய்விகமான மூலத்தினைப் பெற்று இருக்கிறது. அந்தத் தெய்விகமான ஒன்று மட்டுமே புனிதமானது.
4 ஆதலால் மனிதன் அனைத்து மக்களின் வாழ்விலும் இருக்கும் அந்தத் தெய்வீக மூலத்துக்காகச் சேவை செய்ய வேண்டும். அதுவே தந்தையின் விருப்பமாகும்.
5 தந்தையின் விருப்பத்துக்காக சேவை செய்வது தான் அர்த்தமுள்ள வாழ்வினை வெளிப்படுத்தும். அர்த்தமுள்ள வாழ்வே உண்மையானதாக இருக்கின்றது.
6 ஆதலால் ஒருவன் தனது சொந்த விருப்பத்தினில் நிம்மதி கொண்டிருப்பது என்பது மெய்யான வாழ்விற்குத் தேவையல்ல.
7 நிரந்தரமற்ற மானுட வாழ்வே மெய்யான வாழ்விற் கான உணவு ஆகும். அரத்தமுள்ள வாழ்விற்கான ஒரு கருவி அது.
8 ஆகையால் மெய்யான வாழ்வு என்பது காலத்திற்கு அப்பாற்பட்டது. நிகழ்காலத்தில் மட்டுமே அது எப்பொழுதும் இருக்கிறது.
9 கடந்த காலத்தின் வாழ்க்கையோ அல்லது எதிர்காலமோ மக்களிடம் இருந்து அவர்களுடைய மெய்யான வாழ்க்கையினை நிகழ்காலத்தில் மறைத்துவிடுகின்றது.
10 ஆகையால் மனிதன் தன்னுடைய மெய்யான வாழ்வினை மறைக்கும், தனது கடந்த கால வாழ்க்கை மற்றும் எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றிடம் இருந்து விலக இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும்.
11 மெய்யான வாழ்வு என்பது காலத்துக்கு மட்டும் அப்பாற்பட்டது அல்ல, ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்விற்கும் அப்பாற்பட்டதுதான். மெய்யான வாழ்வு என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தான ஒன்று. அது தன்னை அன்பின் வாயிலாகவே வெளிப்படுத்துகின்றது.
12 ஆகையால் எவன் ஒருவன் நிகழ்காலத்தில் அனைத்து மக்களுக்கும் பொதுவான வாழ்வினை வாழ்கின்றானோ அவன், வாழ்வின் மூலமாகவும் அடிப்படையாகவும் இருக்கின்ற தந்தையுடன் இணைகின்றான்.

சுவிசேஷங்களின் சுருக்கம்
லியோ டால்ஸ்டாய்
தமிழில் : வழிப்போக்கன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 220/-
தொடர்புக்கு : 044-24332924

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x