Published : 12 Dec 2019 10:52 AM
Last Updated : 12 Dec 2019 10:52 AM

வார ராசி பலன் 11-12-2019 முதல் 18-12-2019 வரை (துலாம் முதல் மீனம் வரை) 

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் செவ்வாயால் மனஉறுதி பிறக்கும். தொழில், வியாபாரத்தில் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுங்கள். மேலிடத்தின் உத்தரவுகளை அப்படியே நிறைவேற்றுங்கள். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவதால் நன்மை ஏற்படும். வீடு, வாகனங்களுக்கான செலவு கூடும். உறவினர்கள் வகையில் வீண் கருத்து மோதல்கள் ஏற்படலாம். பெண்களுக்கு, எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். கலைத் துறையினருக்கு வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகள் வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஊழியர்களிடம் மென்மையான போக்கைக் கையாள வேண்டும். மாணவர்களுக்கு, கவனத் தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: வெள்ளி கிழமையன்று மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் மனத்தில் உற்சாகம் ஏற்படும். ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரத்தால் வீண் பகை நீங்கும். நண்பர்களிடம் பிரிவு நேரும். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் அகலும். கடன் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இலக்கற்ற அலைச்சல் இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். பணத்தைக் கையாளும் போது கவனம் தேவை. குடும்பாதிபதி குரு, தனஸ்தானத்தில் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் சில்லறைச் சண்டைகள் வந்து அகலும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு, சமையல் செய்யும்போது கவனம் தேவை. கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரித்துச் செல்ல வேண்டும். மாணவர்களுக்கு, இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
எண்கள்: 2, 9
பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் கிரகங்களின் சேர்க்கையால் தன்னம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சால் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கணவன் மனைவிக்குள் திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதியதாக வீடு கட்டும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடமைக்குப் பொறுப்பேற்காமல் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு, கல்வியில் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையன்று நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் செலவு ஏற்படலாம். உடல்சோர்வு, மனச்சோர்வு நிலவும். செவ்வாயின் பார்வையால் அனைத்தையும் தவிடுபொடியாக்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த தடைகள் உடையும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சம்பவங்கள் நடக்கலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள், உறவினர்களிடம் கவனமாகப் பேச வேண்டும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு முன்னர் தீர ஆலோசனை செய்ய வேண்டும். கலைத் துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைவதற்கு கடின உழைப்பு தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: சனிக் கிழமையன்று சனி பகவானை வணங்கி காகத்துக்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கியமடையும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். ராசியாதிபதி சனியின் சஞ்சாரம் உடல் உழைப்பை அதிகரிக்கச் செய்யும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் சுமுகம் பேணவேண்டும். உத்தியோகத்தில் வேலைப்பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். சந்தோஷச் சூழ்நிலை நிலவும். பிள்ளைகளுக்குத் தேவையான வற்றை வாங்கித் தருவீர்கள். புதிய வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்பு தானாக அமையும். பெண்களுக்கு, அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்க வேண்டாம். கலைத் துறையினருக்கு வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். அரசியல்வாதிகளுக்கு, காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். மாணவர்களுக்கு, மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை
எண்கள்: 2, 3, 6
பரிகாரம்: குருவாயூரப்பனை வணங்கிவர எல்லா பிரச்சினைகளும் தீரும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் செயற்கரிய காரியங்களையும் சுபமாக நடத்திக் கொள்வீர்கள். மனோதிடம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வேலைப்பளு குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பெண்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும். மாணவர்களுக்கு, பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: விநாயகப் பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க அனைத்துக் கஷ்டங்களும் நீங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x