Published : 05 Dec 2019 12:32 PM
Last Updated : 05 Dec 2019 12:32 PM

புதுவை பாதி, தமிழகம் பாதி

பனையபுரம் அதியமான்

ஒரு கோயில் மாநில எல்லையில் இருப்பது எங்கும் காணப்படும் அமைப்பு. ஆனால், இரு மாநிலங்களின் எல்லையில் சரிபாதியாக அமைந்துள்ள பழம்பெரும் அம்மன் கோயில் இது. கி.பி.1916-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசால், மேற்கொள்ளப்பட்ட மறு நிலஅளவையில் செங்கழுநீரம்மன் ஆலயம் என்ற பெயரில் இந்த ஆலயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், வழுதாவூர் அருகே அமைந்துள்ள முட்ராம்பட்டு, புதுச்சேரி - திருக்கனூர் -வழுதாவூர் -விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள ஊர் இது. புதுச்சேரிக்கு மேற்கே 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகே புதுவை மாநில எல்லைக்குள் வரும் ஊர் கொடாத்தூர். இதன் மையப்பகுதியில் சங்கராபரணி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் நடுநாயகமாக வீற்றிருக்கிறது  செங்கழுநீர் அம்மன் ஆலயம்.

சுதைச் சிற்பம்

சிறிய ராஜகோபுரம், உள்ளே நுழைந்த கோயில், வலப்புறம் விநாயகர் சந்நிதி, இடப்புறம் பாலமுருகன் சந்நிதி, சற்று தள்ளி நாகேந்திரன், கங்கையம்மன் சந்நிதிகள் அமைந்துள்ளன. மகாமண்டபத்தில் நுழைந்ததும், நம்மை இன்முகமாக வரவேற்பவள், செங்கழுநீர் அம்மன் கீழ்நிலை அம்மன்.

மேலே சுதைச் சிற்பமாகச் செங்கழுநீர் அம்மன் அமர்ந்த நிலையிலும், கீழே கருங்கல் சுயம்பு கீழ்நிலை அம்மனாகவும் அமைந்துள்ளன. இந்த இரு அம்மன்களின் சரிபாதி உருவம் வலப்புறம் தமிழகத்திலும், இடப்புறம் புதுவையிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக ஆராதனைகள் கீழ்நிலை அம்மனுக்கும், அலங்காரம் இரு அம்மன்களுக்கும் நடைபெறும். இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இக்கோயிலை, தமிழ்நாடு, புதுச்சேரி என இரு மாநில கிராமத்தினரும் பகிர்ந்து, பராமரித்து வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அடுத்து வரும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்கி ஒன்பது நாட்கள் உற்சவம் நடைபெறும். இது தற்பொழுது ஐந்து நாட்கள் என்ற அளவில் கொண்டாடப்படுகிறது.

பழங்கால சிவன்

இக்கோயிலின் இடப்புறம் புனரமைப்பின்போது கண்டெடுக்கப்பட்ட பழங்கால சிவலிங்கம் சிறிய சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளது. மல்லிகேஸ்வரர் என அழைக்கப்படுகிறது. இரண்டு மாநிலத்து மக்களும் பண்பாடுகளும் சந்திக்கும் செங்கழுநீர் அம்மனைத் தரிசித்து மனம் குளிரலாம்.குதிரைவிடல் விழா முதல் நாள் உற்சவம் இரு கிராமத்தாரும் சேர்ந்து குதிரைவிடல் விழாவில் தொடங்குகிறது.

இதில் இரண்டு கிராமத்தவரும் மண் குதிரைகள் எடுத்துக்கொண்டு எல்லை காக்கும் அய்யனார் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். மறுநாள், சங்கராபாணி ஆற்றில் இருந்து கரகம் எடுத்துக் கொண்டு, கோயிலுக்கு வருவார்கள்.

பிறகு முதல் இரண்டு நாள் உற்சவம் புதுவை மாநிலம் கொடாத்தூர் மக்களால் நடத்தப்படுகிறது. கூழ் ஊற்றுதல், செடல் ஆகியன இதில் நடைபெறும். மாலையில் ஊருணிப் பொங்கல் வைத்து, இரவு அம்மன் வீதி உலா நடைபெறும். இரண்டாவது நாள் கொடாத்தூர் கிராம மக்கள் சார்பாக விழா நடைபெறும்.

அன்றிரவு அம்மன் வீதி உலா சிறப்பாக நடைபெறும். இரவு அம்மன் வீதி உலா சிறப்பாக நடைபெறும். நான்காம் நாள் விழா முட்ராம்பட்டை அடுத்துள்ள மஞ்சநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சார்பில் நடத்தப்படும். அன்று மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு அம்மன் வீதி உலாவும் சிறப்புடன் நடக்கும்.

குதிரைவிடல் விழா

முதல் நாள் உற்சவம் இரு கிராமத்தாரும் சேர்ந்து குதிரைவிடல் விழாவில் தொடங்குகிறது. இதில் இரண்டு கிராமத்தவரும் மண் குதிரைகள் எடுத்துக்கொண்டு எல்லை காக்கும் அய்யனார் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.

மறுநாள், சங்கராபாணி ஆற்றில் இருந்து கரகம் எடுத்துக் கொண்டு, கோயிலுக்கு வருவார்கள். பிறகு முதல் இரண்டு நாள் உற்சவம் புதுவை மாநிலம் கொடாத்தூர் மக்களால் நடத்தப்படுகிறது. கூழ் ஊற்றுதல், செடல் ஆகியன இதில் நடைபெறும். மாலையில் ஊருணிப் பொங்கல் வைத்து, இரவு அம்மன் வீதி உலா நடைபெறும்.

இரண்டாவது நாள் கொடாத்தூர் கிராம மக்கள் சார்பாக விழா நடைபெறும். அன்றிரவு அம்மன் வீதி உலா சிறப்பாக நடைபெறும். இரவு அம்மன் வீதி உலா சிறப்பாக நடைபெறும். நான்காம் நாள் விழா முட்ராம்பட்டை அடுத்துள்ள மஞ்சநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சார்பில் நடத்தப்படும். அன்று மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு அம்மன் வீதி உலாவும் சிறப்புடன் நடக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x