Published : 25 Nov 2019 03:29 PM
Last Updated : 25 Nov 2019 03:29 PM

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர்

சினிமா உலகில் மிகவும் ஆதர்சமான சர்வதேச உளவாளி ‘ஜேம்ஸ் பாண்ட்’ திரைப்படத்தில் மிகவும் விசேஷம் என்னவெனில் அதில் பயன்படுத்தப்படும் கார்கள்தான். உலகின் மிக வேகமான கார்கள் அதில் இடம்பெறும். சந்தையில் அறிமுகப்படுத்தப்படாத கார்கள் கூட ஜேம்ஸ் பாண்ட் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அதுவும் படத்தில் இடம்பெறும் கார் சேஸிங் சண்டைக் காட்சிக்காகவே அந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் அதிகம். இன்றும் பல படங்களில் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் சண்டைக் காட்சிகள்தான் காப்பியடிக்கப்படுகின்றன.

அந்த வகையில் வரும் 2020 ஏப்ரல் 8-ம் தேதி வெளியாகும் ‘No Time to Die' ஜேம்ஸ் பாண்ட் படத்தில் லேண்ட் ரோவரின் டிஃபெண்டர் இடம்பெறப் போகிறது. படத்தின் சண்டைப் பயிற்சி குழு லேண்ட் ரோவரை மிகக் கடுமையான சூழல்களில் ஓட்டிப் பார்த்திருக்கின்றனராம். நிச்சயம் இது படத்தின் சண்டைக்காட்சிகளில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஃபெண்டர் சமீபத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90, 110 மற்றும் 130 ஆகிய மூன்று வீல்பேஸ் வேரியன்ட்களில் உள்ளது. இதில் படத்தில் பயன்படுத்தப்பட போவது 110 வேரியன்ட். கடுமையான ஆஃப் ரோட் பயணத்துக்காக இதில் ஸ்கிட் பிளேட், 20 அங்குல அலாய் வீல் மற்றும் கடுமையான ஆஃப் ரோட் டயர்கள் உள்ளன. இதனோடு சேர்ந்து அஸ்டன் மார்டின் நிறுவனத்தின் இதுவரை அறிமுகப்படுத்தப்படாத வல்ஹல்லா ஹைப்பர் காரும் பாண்ட் படத்தில் இடம்பெறுகிறது. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் இந்தியாவில் 2020ல் அறிமுகப்படுத்தப்படலாம். விலை ரூ.55 லட்சம் முதல் ரூ 60 லட்சம் என்ற விலையில் இருக்க வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x