Published : 21 Nov 2019 12:47 PM
Last Updated : 21 Nov 2019 12:47 PM

சித்திரப் பேச்சு: அழகிய வைகுண்ட வாசன்

ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வைகுண்டவாசனாக பெருமாள் அருள்புரிவது, ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் சுவாமி கோயிலில்தான். இடது கையைத் தொடையில் ஊன்றியபடி அபயஹஸ்தம் காட்டி கருணையே வடிவாக அமர்ந்திருக்கிறார்.

ஸ்ரீதேவி வலதுகரத்தில் தாமரையும், பூதேவி இடதுகரத்தில் நீலோற்பவத்தையும் வைத்திருக்கிறார்கள். அடியவர்களின் குறைதீர்க்க இருவரும் பத்மாசனத்திலிருந்து உடனடியாக எழும் நிலையில் இருக்கிறார்கள்.

இரண்டு தேவியரும் உடைகளால் வித்தியாசப் படுத்தப்பட்டுள்ளனர். வலதுபுறத்தில் அஞ்சலிஹர ஹஸ்தத்துடன் அழைத்தவுடன் எழுவதற்குத் தயாராக கருடபகவானும் இடப்புறத்தில் விஷ்வக்சேனரும் அமர்ந்துள்ளனர். பெருமாளை அர்ச்சிக்கும் நிலையில் உள்ள இரு முனிவர்களும் தனித்துவமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். ஆதிசேஷன் குடைபிடிக்க சாமரம் வீசும் பெண்களும் நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளனர்.

- ஓவியர் வேதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x