Published : 29 Oct 2019 03:26 PM
Last Updated : 29 Oct 2019 03:26 PM

பேசும் படம்: ஒரு கதை சொல்லட்டுமா?

நெல்லை மா. கண்ணன்

“ஓர் ஒளிப்படத்தில் ஒரு கதை சொல்வதே நோக்கம். அந்தப் படத்தைப் பார்க்கும்போது அந்தக் கதை ஆர்வத்தைத் துாண்டுவது போல் இருக்க வேண்டும். இதுபோன்ற வீதி ஒளிப்படக் கலை சார்ந்த படங்களை எடுப்பதில் ரகுராய், ரகுவீர்சிங் கைதேர்ந்தவர்கள். சர்வதேச அளவில் ஹென்றி கார்த்தியே பிரஸ்ஸான், எலியட் எர்விட், மார்டின் பார் போன்றோர் வகுத்த பாதையில், நான் பயணிக்கிறேன்" என்கிறார் ‘விடுதலை’ மணி.

தஞ்சாவூர் அருகே கருவாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இவர். சென்னையில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்துவருகிறார். நான்கு ஆண்டுகளாக வீதி ஒளிப்படக்கலையில் ஈடுபாட்டுடன் இயங்கிவருகிறார்..

“முதலில் பார்ப்பதற்கான ஆர்வத்தைத் துாண்டும் விதத்திலும், பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலும் இந்த வகையான படங்கள் இருக்க வேண்டும். மெல்லிய நகைச்சுவை உணர்வு இருக்கலாம். மக்களின் உடல் அசைவுகள், சூழலோடு ஒன்றிணைந்து இருந்தால் நல்லது. இடத்தின் தன்மையைப் படம் வெளிப்படுத்த வேண்டும்.

சமூகம் - அரசியல் சார்ந்த விஷயங்களை நேரிடையாகக் காட்சிப்படுத்துவதில்லை. மறைமுகமாக உணர்த்தலாம். பார்வையாளர்கள் கொஞ்சம் மெனக்கெட்டால் அது புரிந்துவிடும்” என வீதி ஒளிப்படக் கலை குறித்துக் கூறுகிறார்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற வீதி ஒளிப்படப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இவருடைய படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

கட்டுரையாளர்
தொடர்புக்கு: mkannanjournalist@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x