Published : 19 Oct 2019 09:43 AM
Last Updated : 19 Oct 2019 09:43 AM

இந்தியாவின் மர்மத் தொற்றுநோய்

டாக்டர் தேவகி

ஹெபடைடிஸ் என்றால் கல்லீரலின் வீக்கம். மதுவால் ஏற்படும் பாதிப்புகள், பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி, ரசாயனம், பிற நோய்த்தொற்றுகள் போன்ற பல காரணங்களால் ஹெபடைடிஸ் ஏற்படுகிறது. ஹெபடைடிஸ் வைரஸ், கல்லீரலைப் பாதிக்கும் முக்கியக் காரணி.

உலக ஆராய்ச்சிக் கணக்கெடுப்பின்படி, நான்கு எச்.பி.வி. நோயாளிகளில் ஒருவர் வாழ்க்கையை இழக்கிறார்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் ஹெபடைடிஸ் வைரஸ் காரணமாக பத்து லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படுவதாக WHO மதிப்பிடுகிறது.

ஹெபடைடிஸ் ஐந்து வெவ்வேறு வைரஸ்களின் குழுவால் ஏற்படுகிறது, அவை ஹெபடைடிஸ் ‘ஏ’ வைரஸ் (HAV), ஹெபடைடிஸ் ‘பி’ வைரஸ் (HBV), ஹெபடைடிஸ் ‘சி’ (HCV), ஹெபடைடிஸ் ‘டி’ வைரஸ் (HDV), ஹெபடைடிஸ் ‘இ’ வைரஸ் (HEV) ஆகியன.

நாள்பட்ட வைரஸ்

பொதுவாக, வைரஸ் தொற்றானது இயற்கையாகவே அழிக்கப்படுகிறது. சில நோயாளிகளுக்கு அறியப்படாத காரணங்களால், கல்லீரல் உயிரணுக்களில் வாழ்நாள் முழுவதும் வைரஸ் தங்கி, கடுமையான உடல்நலக் கஷ்டங்களை ஏற்படுத்துகிறது. ஒரு நபருக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக இருப்பதாகக் கூறப்படும் வைரஸ் நாள்பட்டது என்று அழைக்கப்படுகிறது. இதனால், மற்றவர்களுக்குத் தொற்று ஏற்படு வதற்கான சாத்தியம் அதிகமுண்டு.

நாள்பட்ட வைரஸான ஹெபடைடிஸ் (பி & சி ) ஆகியன பொதுவாக எந்தவொரு மருத்துவ அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. இந்த வைரஸ் கல்லீரலையும் பிற உறுப்புகளையும் பாதிக்கும் வகையில் அவர்களுக்குள் பெருகிப் பரவுகிறது, அத்தகைய நபர்கள் ‘அறிகுறியற்ற ஆரோக்கியமான நாள்பட்ட நோய்த் தொற்றாளர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். ஏறக்குறைய 95 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் நாள்பட்ட ஹெபடைடிஸ் வைரஸ் தொற்றுநோய்களுடன் வாழ்கின்றனர். இந்த நாள்பட்ட நோய்த்தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் ‘மர்மத் தொற்றுநோய்க்கு’ காரணமாக உள்ளனர்.

நோயின் தாக்கம்

இந்தியாவில் சைலண்ட் ஹெபடைடிஸ் தொற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. திடீரென்று கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் புற்றுநோய், ஏன் இறப்புக்குக்கூட இது வழிவகுக்கும். வயது, சுற்றுச்சூழல் காரணிகள், உணவு, வாழ்க்கை முறை, நோய் எதிர்ப்பு ஆற்றல் ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு நபரிடமும் சேதத்தின் அளவு மாறுபடும்.

தனிப்பட்ட நபர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பொறுத்து (தாங்கும் திறன்) மஞ்சள் காமாலை (மஞ்சள் நிறம்), கால்கள், கணுக்கால், கால்களில் வீக்கம், குழப்பம், மலத்தில் ரத்தம் அல்லது வாந்தி போன்றவை ஏற்படும். வைரஸால் ஏற்படும் சேதங்கள், கடைசிக் கட்டங்களில் கல்லீரல் பாதிப்புக்கும், செயலிழப்புக்கும் கல்லீரல் புற்றுநோய்க்கும் வழிவகுக்கின்றன. பிரசவத்துக்கு முந்தைய காலகட்டத்தில் பெறப்பட்ட நோய்த்தொற்றுகள், குழந்தைப் பருவ நோய்த்தொற்றுகள் ஆகியன நாள்பட்ட நோயாக மாறுவதற்கான அதிக ஆபத்தைக் கொண்டுள்ளன.

விழித்தால் உண்டு தீர்வு

வைரஸ் ஹெபடைடிஸ் ஒரு தடுக்கப்படக்கூடிய நோயே. வைரஸ் பரவாமல் தடுக்க, சரியான சிகிச்சையும் விழிப்புணர்வும் அவசியம். பாதிக்கப்பட்ட நபர்களை பொது பரிசோதனை மூலம் அடையாளம் காண வேண்டும், இரத்தத்தைப் பரிசோதித்து, வைரஸின் நேர்மறையான விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நபரிடம் எந்த கட்டத்தில் வைரஸ் உள்ளது என்பதை அடையாளம் கண்டு, பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சையின் மூலம் பகுப்பாய்வு செய்து தடுக்க இது உதவியாக இருக்கும்.

நாள்பட்ட எச்.பி.வி, எச்.சி.வி நோயாளிகளுக்கு தொடக்கத்திலேயே முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம், கல்லீரல் பாதிப்புகளிலிருந்து அவர்களைக் காக்க முடியும். ஹெபடைடிஸ் பி-க்கு மூன்று டோஸ் தடுப்பூசி மூலம் தடுப்பு உருவாக்க முடியும். எச்.பி.வி தடுப்பூசி மூலம் ஹெபடைடிஸ் டெல்டா வைரஸிலிருந்துப் பாதுகாத்துக் கொள்ளலாம். எச்.சி.வி-க்குத் தடுப்பூசி எதுவும் இல்லை, ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால், ஹெபடைடிஸ் சி தொற்றுவதற்கான அபாயத்தைக் குறைக்கலாம்.

நம் கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத் இருவரும் கீ ஹோல் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள். அவர்களுக்குத் தோள்பட்டை பாதிப்பு ஏற்பட்டபோது கீ ஹோல் முறை இங்கு பிரபலமாகவில்லை. எனவே வெளிநாட்டில் செய்து கொண்டார்கள். இப்போதெல்லாம் வெளிநாடு களிலிருந்து இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

கட்டுரையாளர், மருத்துவர்
தொடர்புக்கு: drdhevahimedct@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x