Published : 15 Oct 2019 12:35 PM
Last Updated : 15 Oct 2019 12:35 PM

சந்திப்புகளின் வரலாறு

சென்னையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அக்டோப்ர் 11, 12 தேதிகளில் சந்தித்து கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பு மோடி-ஜின்பிங் இடையிலான இரண்டாம் முறைசாரா உச்சி மாநாடு (Informal Summit).

வரலாற்றில் இதற்காக இரு நாட்டு அரசுகளின் தலைவர்களும் மேற்கண்ட முக்கிய சந்திப்புகள்:

1954 – சீனப் பிரதமர் சூ என் லாய் முதன்முறையாக இந்தியாவுக்கு வந்திருந்தார். இரு நாடுகள் இடையே பஞ்சசீலக் கொள்கை ஒப்பந்தம் கையெழுத்தானது.
1956 - இரண்டாம் முறையாக இந்தியாவுக்கு வந்தார் சூ என் லாய். அப்போது சென்னைக்கும் மாமல்லபுரத்துக்கும் வருகைபுரிந்தார்.
1960 - சூ என் லாய் மூன்றாவது முறையாக இந்தியா வந்தார். பிரதமர் ஜவாஹர்லால் நேருவுடன் எல்லைப் பங்கீட்டுப் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடினார்.
1988 – இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சீனாவுக்கு பயணமானார். போருக்குப் பின் இரு நாட்டு உறவுகளை மீண்டும் மேம்படுத்துவதற்கான தொடக்கமாக இது அமைந்தது.
1991- 31 ஆண்டுகளுக்குப் பிறகு சீனப் பிரதமர் லீ பெங் இந்தியா வந்தார்.
1993 – இந்தியப் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் சீனாவுக்குச் சென்றார். இரு நாடுகளும் எல்லையில் அமைதியைப் பேணுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது
1996 – சீன அதிபர் ஜியாங் ஜெமின் இந்தியா வந்தார். பரஸ்பர நம்பிக்கை வளர்ப்பு நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
2002 – சீனப் பிரதமர் சூ ரோங்ஜி இந்தியா வந்தார்.
2003 – இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் சீனாவுக்குச் சென்றார்.
2005 – சீனப் பிரதமர் வென் ஜியாபோ இந்தியா வருகை.
2009 – இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சீனா பயணம்
2014 – பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியும் ஜி ஜின்பிங்கும் முதல் முறையாக சந்தித்துக்கொண்டனர். இதே ஆண்டில் ஜி இந்தியாவுக்கு வருகைபுரிந்தார். இரு நாடுகளுக்குமிடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
2015 – சுஷ்மா ஸ்வராஜ் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஜின்பிங்கை சந்தித்தார். இதே ஆண்டு பிரதமர் மோடியும் சீனாவுக்கு சென்று அந்நாட்டுப் பிரதமர் லீ கேகியாங்கை சந்தித்தார்.
2017 – சீனாவின் ஜியாமென் நகரத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் மோடியும் ஜின்பிங்கும் சந்தித்துக்கொண்டனர்.
2018 – ஏப்ரல் 27, 28 தேதிகளில் சீனாவின் ஊஹான் நகரத்தில் மோடி, ஜின்பிங் இடையிலான முதல் முறைசாரா சந்திப்பு நடைபெற்றது. அதே ஆண்டு ஜூன் மாதம் சீனாவில் நடைபெற்ற பாதுகாப்பு உச்சி மாநாட்டிலும் மோடி கலந்துகொண்டார்.

தொகுப்பு - கோபால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x