Published : 14 Oct 2019 12:55 PM
Last Updated : 14 Oct 2019 12:55 PM

வெற்றி மொழி: டி.எஸ்.எலியட்

1888-ம் ஆண்டு முதல் 1965-ம் ஆண்டு வரை வாழ்ந்த டி.எஸ்.எலியட் அமெரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் மறைந்த புகழ்பெற்ற கவிஞர். மேலும் கட்டுரையாளர், பதிப்பாளர், நாடக ஆசிரியர், இலக்கிய மற்றும் சமூக விமர்சகர் போன்ற பன்முகத் திறனாளர்.

தனது படைப்புகளின் மூலமாக இருபதாம் நூற்றாண்டின் ஆங்கிலோ-அமெரிக்க கலாச்சாரத்தில் வலுவான செல்வாக்கை செலுத்தியவர். நவீன கால கவிதைக்கான தனது முன்னோடி பங்களிப் புக்காக 1948-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய மற்றும் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் இவர்.

* நாம் ஆரம்பம் என்று அழைப்பது பெரும்பாலும் முடிவுதான்.
* விதிகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும் வரை அவற்றை மீறுவது புத்திசாலித்தனம் அல்ல.
* ஒவ்வொரு அனுபவமும் ஒரு முரண்பாடு.
* ஒரு முடிவை உருவாக்குவது என்பது ஒரு தொடக்கத்தை உருவாக்குவதாகும்.
* மனிதகுலத்தால் மிகவும் அதிகப்படியான யதார்த்தத்தை தாங்க முடியாது.
* ஒரு படைப்பை உருவாக் கும்போது ஒருவர் கண்டு பிடிக்கும் கடைசி விஷயம் எதை முதலில் வைக்க வேண்டும் என்பதே.
* இந்த உலகத்தில் உள்ள பெரும்பாலான தீமைகளை நல்ல நோக்கத்துடன் மக்கள் செய்கிறார்கள்.
* வாழ்க்கையில் உங்கள் சொந்த விதிமுறைகளை விதிக்க உங்களுக்கு வலிமை இல்லையென்றால், அது உங்களுக்கு அளிக்கும் விதிமுறைகளை நீங்கள் ஏற்க வேண்டும்.
* முடிவு என்பது எங்கிருந்து தொடங்கினோமோ அதுவே.
* ரத்தத்தை மையாக மாற்று வதே இலக்கியத்தின் நோக்கம்.
* நகைச்சுவையானது தீவிரமான ஒன்றைச் சொல்வதற்கான மேலும் ஒரு வழியாகும்.
* கடந்த காலத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் மட்டுமே, உங்களால் அதை மாற்ற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x