Published : 02 Oct 2019 12:47 PM
Last Updated : 02 Oct 2019 12:47 PM

ஆங்கிலம் அறிவோமே - 283: ரிஸ்க் எடுக்காமல் சாதிக்க முடியுமா?

ஜி.எஸ்.எஸ்.

கேட்டாரே ஒரு கேள்வி

“மருத்துவர்கள், Holistic treatment என்கிறார்களே அதற்கு என்ன பொருள்? புனிதமான என்பதற்கும், இதற்கும் ஏதாவது தொடர்புண்டா ?”
புனிதம் எனப்படுவது holy. Holistic என்றால் ஒன்றுக்கோ ஒருவருக்கோ ஒட்டுமொத்தமாகச் சிகிச்சை அளிப்பது. உதாரணத்துக்கு, தலைவலி என்றால் அதற்கான களிம்பைத் தடவுவதோ, தலைவலி மாத்திரை சாப்பிடுவதோ hol istic approach அல்ல. அந்தத் தலைவலி எதனால் உண்டானது என்பதை அறிந்து அதற்குத் தீர்வுகாண்பது Holistic approach. உடல், மனம் இரண்டுக்கும் ஒருசேரச் சிகிச்சை அளித்து நோயிலிருந்து விடுவிக்க முயல்வது.

“Plait என்பதற்கும், plate என்பதற்கும் என்ன வேறுபாடு?”
பெண்கள் தங்கள் கூந்தலை மூன்றாகப் பிரித்து பின்னிக்கொள்வார்கள். அந்த ஒவ்வொரு பிரிவும் plait. மற்றபடி plate என்றால் தட்டு என்பது நீங்கள் அறிந்ததுதான்.

“A ​place inside out என்ப தற்குப் பொருள் என்ன?’’ எனக் கேட்கிறார் ஒரு வாசகர்.
ஒரு இடத்தின் எல்லாப் பகுதிகளையும் கவனத்துடன் தேடுவதை “to turn a place inside out” என்பார்கள். I have turned the house inside out but I still cannot find my keys என்றால் என் வீட்டைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுப் பார்த்துவிட்டேன். சாவிகள் கிடைக்கவில்லை என்று பொருள்.
கூடவே, இப்படித் தேடிப் பார்த்ததில் அந்தப் பகுதியே ரணகளமாகிவிட்டது என்பதையும் இது மறைமுகமாகக் குறிக்கிறது. ஆக அதற்குப் பிறகு you have to turn the place outside in!

“Nothing ventured, nothing gained” என்பதற்கான விளக்கத்தை அளிக்க முடியுமா?
எந்த ரிஸ்க்கையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் எதையுமே சாதிக்க முடியாது என்பதுதான் இதன்பொருள்.
“Go and ask your boss for a promotion. Nothing ventured, nothing gained”.

Valley – Volley
Valley என்பது இரண்டு குன்றுகளுக்கு இடையே இருக்கும் ஒரு பகுதி. பள்ளத்தாக்கு எனலாம். பெரும்பாலும் அங்கு நதி ஓடிக் கொண்டிருக்கும்.
Volley என்றால் சரமாரியான வெளிப்பாடு. அது துப்பாக்கிக் குண்டுகளாகவும் இருக்கலாம், கேள்விகளாகவும் இருக்கலாம்.
A volley of arrows was launched at us.
She unleashed a volley of angry questions.
போட்டியில் கேட்டுவிட்டால்
Good health depends on the ______ of a few simple rules of health.
1) Observation
2) occurrence
3) observance
4) adjustment
ஆரோக்கியமான உடல்நலம் என்பது சில அடிப்படை ஆரோக்கிய விதிகளைப் பின்பற்றுவதைப் பொறுத்தது என்கிற பொருள் தரும் வாக்கியம் அது.
Observation என்றால் கவனிப்பு. அடிப்படை விதிகளைக் கவனிப்ப தால் அல்லது கண்காணிப்பதால் உடல்நலம் மேம்படாது.
Occurrence என்றால் தோன்றுதல். அடிப்படை விதிகள் தோன்றுதல் என்பது பொருத்தமாக இல்லை. அதேபோல் விதிகளை adjust செய்வதால் உடல்நலம் மேம்படாது.
Observance என்றால் பின்பற்றுதல். இதுவே மிகப் பொருத்தமாக இருக்கிறது.
Good health depends on the observance of a few simple rules of health.

சிப்ஸ்

Fat Wallet என்றால் என்ன?

நாம் purse என்று சொல்வது தான் wallet. He has a fat wallet என்றால் அது தடிமனான தோலால் செய்யப்பட்டது என்று அர்த்தமில்லை. அதில் நிறையப் பணம் உள்ளது.

முதுகு வலிக்கிறது என்பதை எப்படிச் சொல்வது?

My back hurts

Don’t talk என்பதற்கும், Don’t be talking என்பதற் கும் என்ன வித்தியாசம்?

பேசாதே. பேசிக்கொண்டே இருக்காதே

தொடர்புக்கு:
aruncharanya@gmail.com)
(நிறைவடைந்தது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x