ஊக்கமளிக்கும் ஊக்கத்தொகை: சிறுபான்மையின மாணவிகளுக்கு உதவி

ஊக்கமளிக்கும் ஊக்கத்தொகை: சிறுபான்மையின மாணவிகளுக்கு உதவி
Updated on
1 min read

சாதனா

சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு மவுலானா ஹஸ்ரத் மகால் தேசிய ஊக்கத்தொகையை வழங்கிவருகிறது இந்திய அரசின் சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சகம். பின்தங்கிய சூழலைச் சேர்ந்த மாணவிகளுக்கு இத்திட்டம் கைகொடுக்கும்.

தகுதி

முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய, பெளத்த, சமண, பாரசீகப் பிரிவுகளைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்துவரும் மாணவிகள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருப்பது அவசியம். தேர்வுசெய்யப்படும் மாணவிகளில் 9-ம், 10-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம், பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30 செப்டம்பர் 2019
விண்ணப்பிக்க: https://bit.ly/2MP18rl
கூடுதல் விவரங்களுக்கு: https://bit.ly/2kXQAcN

பொறியியல் படிக்க உதவி

பொறியியல் பட்டப் படிப்பு படித்துவரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவிருக்கிறது ஷாஃப்ளர் இந்தியா நிறுவனம். பிளஸ் 2-வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றுத் தற்போது பி.இ. படித்துவரும் தமிழக மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற கல்லூரி மாணவராக இருப்பது அவசியம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்வுசெய்யப்படும் பொறியியல் மாணவர்கள் படித்து முடிக்கும்வரை ஆண்டுக்கு ரூ. 75 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

ஆன்லைனின் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30 செப்டம்பர் 2019
விண்ணப்பிக்க:http://https://bit.ly/2m2m1mF

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in