Published : 23 Sep 2019 09:49 AM
Last Updated : 23 Sep 2019 09:49 AM
சூப்பர் கார்களுக்கெல்லாம் சூப்பர் கார் ஃபெராரி என்பார்கள். ஃபெராரியின் தோற்றமும் நிறமும் செயல்திறனுமே அதற்குச் சான்று. தற்போது ஃபெராரி நிறுவனம் எஃப் 8 டிரிபியுடோ என்ற சூப்பர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெனீவாவில் நடந்த வாகனக் கண்காட்சியில் இந்த மாடல் காட்சிப்படுத்தப்பட்டது.
முந்தய மாடலான ஃபெராரி 488-ல் உள்ள அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இந்த எஃப் 8 டிரிபியுடோ தயாரிக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத் தோற்றத்தில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தவிர்த்து ஃபெராரி 488-க்கும் எஃப் 8 டிரிபியுடோவுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.
இதன் நீளம் 4,611 மிமீ, அகலம் 1,979 மிமீ, உயரம் 1,206 மிமீ என்ற அளவிலான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. ஃபெராரி 488-யை விட எஃப் 8 டிரிபியுடோவின் செயல்திறன் அதிகம். வி 8 இன்ஜினைக் கொண்டிருக்கும் இது 720 ஹார்ஸ் பவரை உற்பத்தி செய்யக் கூடியது. அதேபோல் 7.8 வினாடிகளில் 200 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT