Published : 18 Sep 2019 01:13 PM
Last Updated : 18 Sep 2019 01:13 PM

அறிவியல் மேஜிக்: தானாக எரியும் மெழுகுவர்த்தி!

இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாவிட்டால், மெழுகுவர்த்தியைத் தேடுவீர்கள் அல்லவா? அந்த மெழுகுவர்த்தியைத் தானாக எரிய வைக்க உங்களால் முடியுமா? ஒரு சோதனை செய்து பார்த்துவிடலாம். (பெரியவர்கள் உதவியுடன் இந்தச் சோதனையைச் செய்ய வேண்டும்).

என்னென்ன தேவை?

மெழுகுவர்த்தி

தீப்பெட்டி

எப்படிச் செய்வது?

# மெழுகுவர்த்தியை நேராக நிறுத்திக்கொள்ளுங்கள்.

# தீக்குச்சியால் மெழுகுவர்த்தியைப் பற்ற வையுங்கள். மெழுகுவர்த்தி அழகாக எரிகிறதா?

# அதை 10 நிமிடங்களுக்கு அப்படியே எரியவிடுங்கள்.

# இப்போது எரியும் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிடுங்கள்.

# மெழுகுவர்த்தியிலிருந்து புகை வருகிறதா?

# தீக்குச்சியைப் பற்ற வைத்து, அதை மெழுகுவர்த்தியிலிருந்து 2 அல்லது 3 செ.மீ. தொலைவுக்குக் கொண்டு செல்லுங்கள்.

# நீங்கள் மெழுகுவர்த்தியை நெருப்பால் தொடாமலேயே மெழுகுவர்த்தி எரிவதைப் பார்க்கலாம்.

மெழுகுவர்த்தி எப்படி எரிந்தது? - காரணம்

நீங்கள் மெழுகுவர்த்தியை அணைத்தவுடன் மெழுகுவர்த்தியிலிருந்து புகை வந்தது அல்லவா? அந்தப் புகையில் எரியக்கூடிய வாயு இருக்கும். அதாவது, புகையில் பாரஃபின் கலந்திருக்கும். அத்துடன் எரிவதற்குத் தேவையான ஆக்சிஜனும் இருக்கிறது. அந்த மெழுகுவர்த்தி அணைக்கப்பட்ட உடனே, அது எரியக்கூடிய வெப்பநிலையி்ல் இருக்கும். ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான மூன்று விஷயங்கள் இருப்பதால், தீக்குச்சியை மெழுகுவர்த்தியின் அருகே கொண்டு செல்லும்போது நெருப்பு தானாகப் பற்றி எரியத் தொடங்கிவிடுகிறது.

பயன்பாடு

எரியும் வெப்பநிலையில் உள்ள பொருட்கள் எளிதில் தீப்பற்றும் என்ற பண்பை நிரூபிக்க இந்தச் சோதனை உதவுகிறது.

- மிது கார்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x