

ஜெ.கு.லிஸ்பன் குமார்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் டெக்னீஷியன், தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளில் 86 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இக்காலியிடங்கள் டெக்னீஷியன் பணியில் ஃபிட்டர், எலெக்ட்ரானிக் மெக்கானிக், பிளம்பர், வெல்டர், மெஷினிஸ்ட், டிராஃப்ட்ஸ்மேன்-மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் ஆகிய பிரிவுகளிலும் தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சிவில் ஆகிய பிரிவுகளிலும் இடம்பெற்றுள்ளன.
தகுதி
டெக்னீஷியன் பணிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ. அல்லது என்.டி.சி. அல்லது என்.ஏ.சி. தேர்ச்சி அவசியம். தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பொறியியல் டிப்ளமா (பாலிடெக்னிக்) பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 18 முதல் 35 வரை இருக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓ.பி.சி.-க்கு 3 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு உண்டு. தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு (Skill Test) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத்தேர்வு பெங்களூருவில் மட்டுமே நடத்தப்படும். உரிய கல்வித் தகுதியும், வயதுத் தகுதியும் உடையவர்கள் இஸ்ரோ இணையதளம் வழி (www.isro.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 13 செப்டம்பர் 2019