Last Updated : 15 Jul, 2015 12:52 PM

 

Published : 15 Jul 2015 12:52 PM
Last Updated : 15 Jul 2015 12:52 PM

உலகைக் காக்கும் சிறுமி

மிக்கி மவுஸ், ஸ்ரக், குங்ஃபூ பாண்டா எல்லாவற்றையும் படத்தில் பார்த்திருக் கிறீர்களா? இந்த மாதிரி பொம்மைப் படங்களை அனிமேஷன் படங்கள் என்று சொல்வார்கள். பெரிய கரடி உருவத்தில் உள்ள ஸ்ரக் என்கிற பூதம் உங்களைப் போலவே அழகாக இருக்கும். அது சிரிக்கும்போது பார்த்தால் வளர்ந்த பாப்பா போலவே இருக்கும். ஆனால், உண்மையில் எந்த விலங்கும் அப்படியெல்லாம் இருக்காது இல்லையா?

டைனோசர் என்று ஒரு விலங்கு இப்போது இல்லை. அது மனிதர்களான நாமெல்லாம் தோன்றுபதற்கு முன்னாலேயே முழுவதுமாக அழிந்து போய்விட்டது. ஆனால், அந்த விலங்கை நம் கண் முன்னாடி தத்ரூபமாக உருவாக்கிக் காட்டினார்கள் இல்லையா? இது எல்லாம் அனிமேஷன் செய்யுற மாயாஜாலம்தான். நம்ம தாத்தா, பாட்டி சொல்கிற மந்திரக் கதையைப் போல.

இந்த மாதிரி ஒரு புதிய கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் பெயர் ‘பிரின்ஸஸ் ஸ்டார் பட்டர்ஃப்ளை’. ‘ஸ்டார் வெர்சஸ் ஈவில்’ என்ற ஒரு நாடகத்துக்காகத்தான் இந்த பிரின்ஸஸ் ஸ்டார் பட்டர்ஃப்ளையை உருவாக்கியிருக்கிறார்கள். வானத்துக்கு போய், அங்கு இருக்கிற பேய்கூட சண்டையைப் போட்டு இந்த பிரின்ஸஸ் ஸ்டார் பட்டர்ஃப்ளை உலகத்தையே காப்பாற்றுகிறது.

இந்த பிரின்ஸஸ் ஸ்டார் பட்டர்ஃப்ளை ரொம்ப அழகாகப் பக்கத்து வீட்டுப் பாப்பா மாதிரியே இருக்கிறது. அதைச் சுற்றி எப்போதும் வண்ணத்துப்பூச்சிகள் பறந்துகொண்டே இருக்கின்றன. கையில் ஒரு கலர் பென்சில் போல ஒரு பொருளை வைத்திருக்கிறாள் பிரின்ஸஸ் ஸ்டார் பட்டர்ஃப்ளை. அவள் கையை விரித்து ஆடும்போது பின்னால் வானவில் போல பல வண்ணங்கள் கோலம் போடுகின்றன.

இதை உருவாக்கி யவர்கள் யார் தெரியுமா? டிராகன் நெஸ்ஃபி. இவர் சின்னப் பையனாக இருந்தபோதே இந்த மாதிரி குட்டிக் குட்டி படங்களை வரைந்து பார்ப்பாராம். நீங்கள் பென்சிலால் உங்களுக்குத் தோணுவதையெல்லாம் வித்தியாசமாக நிறைய வரைந்து பார்ப்பீர்கள் இல்லையா? அது மாதிரிதான்.

நெஸ்ஃபி பெரிய ஆளாக ஆன பிறகு உஹ்-ஹொஹ் என்ற ஒரு பிங்க் நிறப் பூனைக்குட்டியை அனிமேஷன் மூலம் உருவாக்கினார். அந்தப் பூனைக் குட்டி டி.வி.யில் நடிப்பதைப் பார்த்ததும் எல்லோருக்கும் பிடித்துப் போய்விட்டது. இதேபோல நிறைய பாத்திரங்களையும் அவர் உருவாக்கியிருக்கிறார். அந்த வரிசையில் இப்போது இந்த பிரின்ஸஸ் ஸ்டார் பட்டர்ஃப்ளை.

அமெரிக்காவில் உள்ள குட்டிப் பசங்க எல்லோரும் இப்போது இந்த பிரின்ஸஸ் ஸ்டார் பட்டர்ஃப்ளையின் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். கூடிய சீக்கிரம் இந்த பிரின்ஸஸ் ஸ்டார் பட்டர்ஃப்ளை நம்ம ஊருக்கும் வரலாம். அப்போ நீங்களும் ரசிகர்கள் ஆகத் தயாராகுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x