

சாதனா
மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஒ.). இந்நிறுவனம் அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது. பி.இ./பி.டெக்./பி.எஸ்சி.பொறியியல் அல்லது எம்.இ./எம்.டெக்./எம்.எஸ்சி.பொறியியல் படித்துக்கொண்டிருக்கும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
அவசியம் தேவை
இளநிலையில் படிக்கும் மாணவிகள் கட்டாயம் ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முதுநிலைப் பொறியியல் மாணவிகளோ சி.ஜி.பி.ஏ./சி.பி.ஐ. (CGPA/CPI) எனப்படும் திரளாகச் சேர்த்த மதிப்பெண்கள் 10-க்கு குறைந்தபட்சம் 6.75 எடுத்திருக்க வேண்டும். இதுபோக கேட் தேர்விலும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் 20 இளநிலை மாணவிகளுக்கு வருடத்துக்கு ரூ.1.2 லட்சம் அல்லது அவர்களுடைய பட்டப் படிப்புக்கான கட்டணத் தொகை நான்காண்டுகள்வரை வழங்கப்படும். முதுநிலை மாணவிகளைப் பொருத்தவரை 10 பேருக்கு வருடத்துக்கு ரூ.1.86 லட்சம் அல்லது அவர்களுடைய பட்டப் படிப்புக்கான கட்டணத் தொகை இரண்டாண்டுகள்வரை அளிக்கப்படும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
10 செப்டம்பர் 2019
கூடுதல் விவரங்களுக்கு,
விண்ணப்பிக்க: http://http://www.b4s.in/vetrikodi/DRDO