Published : 20 Aug 2019 10:58 AM
Last Updated : 20 Aug 2019 10:58 AM

ஆங்கில​ம் அறிவோமே-278: ஏனோ அப்படி உணர்கிறேன்!

ஜி.எஸ்.எஸ்.

கேட்டாரே ஒரு கேள்வி

ஒரு Capital idea, Capital punishment-க்கு வழிவகுக்குமா?
Capital idea என்றால் மிகச் சிறந்த ஐடியா. Capital punishment என்றால் மரணத் தண்டனை. மற்றபடி கேள்விக் கான​ பதில் அவரவரைப்

“Lead என்பதற்கும், led என்பதற் கும் உள்ள வேறுபாடு என்ன?”
தலைமையேற்பது எ​ன்ற பொருள் கொண்ட lead (அல்லது leads) என்பது present tense. Led என்பது​ past tense.
He leads the party.
He led us to the museum.
கணிசமானவர்கள் lead என்பதையே past tense ஆகவும் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கி றேன். அப்படிப் பயன்படுத்திய ஒருவரைக் கேட்டபோது “Lead என்று எழுதிவிட்டு led என்பதைப் போல் உச்சரிக்க வேண்டும்’’ என்றார். இந்தக் குழப்பம் நேர்ந்திருக்க எனக்கு ஒரு காரணம் தோன்றுகிறது. Read என்பது present tense. அதன் past tense-ம் readதான். ஆனால், past tenseஐ red என்பதுபோல் உச்சரிக்க வேண்டும். இதே அடிப்படையை lead என்பதற்கும் பயன்படுத்துவதால் உண்டான குழப்பம் இது.
ஈயம் என்பதையும் lead (இங்கு lead-ஐ ’லெட்’ என்று உச்சரிக்க வேண்டும்) என்ற வார்த்தையின்​மூலம் குறிப்பிடலாம். Pencil lead என்பதுண்டு. (ஆனால், உண்மை யில் பென்சிலில் உள்ள கருப்பான எழுதுபொருள் lead அல்ல கிராபைட்.)

Gigantic என்ற வார்த்தையை எப்படி உச்சரிப்பது எனக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.
பலரும் இங்கு ‘ஜைஜான்டிக்’ (jai jan tik) என்று உச்சரிக்கிறார்கள். அது தவறு. ‘ஜைகான்டிக்’ (jai gan tik) என்றுதான் உச்சரிக்க வேண்டும். இன்னொரு உச்சரிப்புத் தவறையும் அறிந்துகொள்வோம்.
ரயில் பெட்டிகளில் 2 tier, 3 tier போன்றவற்றை அறிந்திருப்போம். 3 Tier என்பதை 3 டயர் (3 Tyre) என்று உச்சரிக்கக் கூடாது. 3 டியர் (3 tear) என்பதுபோல உச்சரிக்க வேண்டும்.

“Consolation, solace என்ற இரு வார்த்தைகளுக்கும் ஒரே பொருள்தானா?’’
Consolation என்றால் ஆறுதல். ஆறுதல் பரிசை consolation prize என்று கூறுவதை அறிந்திருப்போம்.
Solace என்பது ஆறுதலையும் கொஞ்சம் தாண்டியது. அதில் ஒரு பாதுகாப்பு உணர்வு இருக்கும்.
ஒரு குடும்பத் தலைவர் மறைந்துவிட்டால் “கவலைப்படாதே. கடவுள் இனி கை கொடுப்பார். மீண்டு​ எழுவாய்” எனும்போது நீங்கள் அளிப்பது consolation. கூடவே “குடும்பத்தை நடத்த முடியாதேன்னு கவலைப்பட வேண்டாம். நான் எல்லா உதவியையும் செய்கிறேன்’’ எனும்போது அவருக்குக் கிடைக்கும் உணர்வை solace எனலாம்.



Gut feeling என்கிறார்களே அதற்கு என்ன பொருள்?
உள்ளுணர்வு என்றுதான் இதற்குப் பொருள். அதாவது தர்க்க​ரீதியாக விளக்க முடியாத ஒரு உணர்வு. ஒருவர் எ​தையோ சொல்கிறார். “My gut feeling is that he is lying” என்று நீங்கள் சொன்னால். “அவர் பொய் சொல்கிறார். கு​றிப்பிட்ட காரணம் ஏதுமின்றி ஏனோ அப்படி உணர்கிறேன்” என்று அர்த்தம்.
Gut என்று மட்டும் குறிப்பிட்டால் அது வயிற்றைக் குறிக்கிறது.

“With reference என்பதற்குப் பிறகு எப்போதுமே to என்ற preposition தான் வருகிறது. On behalf என்பதற்குப் பிறகு எப்போதுமே of என்ற preposition தான் வருகிறது. இப்படி நிறைய இணை வார்த்தைகள் உண்டோ?’’ என்று கேட்கிறார் ஒரு வாசகர்.
இவற்றை phrase prepositions என்பார்கள். In spite of, because of, with a view to, on account of, owing to, for the sake of, in front of போன்றவே இத்தகையவை.
போட்டியில் கேட்டுவிட்டால்
The machine which they ________ yesterday is very old.
(a) seen
(b) visited
(c)​ inspect
(d) saw
(e) met
கருவியைச் சந்திப்பது என்பது சரியல்ல. எனவே visited, met ஆகியவை தவறானவை.
Seen, inspect ஆகியவை இங்கு இலக்கணப்படி தவறு. Had seen, ​inspected என்றிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். எனவே The machine which they saw yesterday is very old என்பதே சரியானது.

சிப்ஸ்

# Cry என்பதற்கும், Weep என்பதற்கும் வேறுபாடு உண்டா?
Cry -அழுவது, Weep - கண்ணீர் விடுவது. உரத்துக் குரல் கொடுப்பதையும் cry என்பதுண்டு.
# Honcho என்றால்?
இது ஐப்பானிய வார்த்தை. இதன் பொருள் boss.
# Blueprint என்றால் என்ன?
ஓர் ஆவணத்தில் அல்லது செயல் பாட்டில் எதையெல்லாம் கொண்டு வரலாம் என்பதைப் பற்றிய சிறிய அவுட்லைன்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x