செய்திப்பிரிவு

Published : 12 Aug 2019 11:11 am

Updated : : 12 Aug 2019 11:11 am

 

ஆச்சரியமூட்டும் விலையில் புதிய புல்லட்

new-bullet

இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் வித்தையைக் கற்றுவைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்ட். எத்தனை புதிய தயாரிப்புகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், போட்டி அதிகமானாலும் தனக்கான சந்தையைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கான உத்திகளை கையாள்வதிலும் பலே கில்லாடியாக இருக்கிறது. முன்பெல்லாம் அரிதாக ஒன்றிரண்டு கண்ணில் படும்.

சத்தைத்தை கேட்டால் ஊரே திரும்பிப் பார்க்கும். அத்தகைய ராயல் என்ஃபீல்ட் புல்லட், இனி சர்வசாதாரணமாக எல்லோர் விட்டு வாசலிலும் நிற்கப் போகிறது. காரணம் மிகக் குறைந்த விலையில், யார் வேண்டுமானாலும் வாங்கும் விலையில் புதிதாக ராயல் என்ஃபீல்ட் புல்லட் அறிமுகமாகியிருக்கிறது.

ராயல் என்ஃபீல் புல்லட் 350 மற்றும் 350 இஎஸ் என்ற இரண்டு புதிய புல்லட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்
ளன. புதிய புல்லட் 350-ன் விலை ரூ.1.12 லட்சம். ஸ்டேண்டர்ட் புல்லட்டின் விலை ரூ.1.21 லட்சம். சுமார் ரூ.9000 விலைக் குறைவு. இந்த புதிய புல்லட் 350 மாடலின் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் ரூ.1.27 லட்சம் ஆகும்.
மேலும் ஸ்டேண்டர்ட் புல்லட் கருப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைத்த நிலையில் புதிய புல்லட் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. சில்வர், சஃபையர் புளூ, ஓனிக்ஸ் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்
கிறது.

ஸ்டேண்டர்ட் 350 எஸ் மக்ரோன், சில்வர் ஆகிய வண்ணங்களில் மட்டுமே கிடைக்கிற்து. புதிய 350 இஎஸ் மாடல் ஜெட் பிளாக், ரீகல் ரெட் மற்றும் ராயல் புளூ ஆகிய வண்ணங்களில் வருகிறது. புதிய புல்லட்டுக்கும் முந்தைய புல்லட்டுகளுக்கும் உள்ள வித்தியாசமே கருப்பு வண்ணம்தான். ஸ்டேண்டர்ட் புல்லட்டுகளில் அதிகமான இடங்களில் குரோம் பினிஷ் இருக்கும்.

ஆனால், புதிய புல்லட்டுகளில் கருப்பு வண்ண கோட்டிங் இன்ஜின், கிராங்க் கேஸ் என முடிந்தவரை பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு வித்தியாசம் ஃபூயல் டேங்கில் உள்ள லோகோ. புதிய புல்லட்டில் லோகோ வடிவமைப்பு ஸ்டைலாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இன்ஜின் திறனில் எந்த மாற்றமும் இல்லை. அதே 346 சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்ட் இன்ஜின் 19.8 ஹெச்பி பவரையும், 28 என் எம் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்துகிறது. பெரும்பாலான டூவீலர்களின் விலை கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை நெருங்குவதால், பலர் விலை குறைவான ராயல் என்ஃபீல்டு புல்லட்டை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

புதிய புல்லட்ஆச்சரியமூட்டும் விலைபுதிய தயாரிப்புகள்ராயல் என்ஃபீல்ட்Royal Enfield

Popular Articles

You May Like

More From This Category

More From this Author