செய்திப்பிரிவு

Published : 10 Aug 2019 11:48 am

Updated : : 10 Aug 2019 11:48 am

 

பிவிசி பயன்பாடுகள்

pvc-applications

சீதாராமன்

மரப் பலகையைத்தான் வீட்டுக் கதவுகளுக்காகப் பயன்படுத்தி வந்தோம். ஆனால், இன்றைக்கு அறிவியல் வளர்ச்சியால் பல புதிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பிவிசி கதவுகள் இன்றைக்குப் பரவலான பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கழிவறைக் கதவாக இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படுவது இந்த பிவிசி கதவுகளே.
பிவிசி கதவுகள், கழிவறைக்கு மட்டுமல்லாமல் உள் அறைகளுக்கும் பயன்படுத்த ஏற்றவை. மரக் கதவுடன் ஒப்பிடும்போது விலை குறைவு. மரப் பலகை போன்ற வடிவமைப்பிலும் பிவிசி கதவுகள் கிடைக்கின்றன. அதனால் வீட்டின் அழகு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

பிவிசி பலகைகள் கதவுகளுக்கு மட்டுமின்றி, மாடுலர் சமையலறை அமைக்கவும் இப்போது பரவலாகப் பயன்படுகிறது. மரப் பலகை கொண்டு மாடுலர் சமையலறை அமைப்பதைக் காட்டிலும் இது எளிதானது. மரப் பலகைக்கு ஆகும் செலவுடன் ஒப்பிடும்போது பாதிக்கும் குறைவாகவே பிவிசிக்குச் செலவு ஆகும். மரப் பலகையைவிட நீடித்த உழைப்பையும் தரும். பல வண்ணங்களில் கிடைக்கிறது. இதற்கு மேல் வண்ணம் பூச வேண்டிய அவசியம் இல்லை. பிவிசி கதவுகளைப் பராமரிக்க தேவை இல்லை மரக் கதவுகளைப் போல் கால நிலைக்கு ஏற்ப விரிவடையும் தன்மை அற்றவை. அதனால் எல்லாக் கால நிலைக்கும் ஏற்றவை.

மரப் பலகைபிவிசிபிவிசி கதவுகள்பிவிசி பலகைகள்மாடுலர் சமையலறை

Popular Articles

You May Like

More From This Category

More From this Author