Published : 08 Aug 2019 10:29 am

Updated : 08 Aug 2019 10:37 am

 

Published : 08 Aug 2019 10:29 AM
Last Updated : 08 Aug 2019 10:37 AM

வார ராசி பலன்கள் - ஜூலை 08 முதல் 14 வரை ( மேஷம் முதல் கன்னி வரை)  

weekly-astrology

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு மாற்றம் பெறுகிறார். எல்லாக் காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். அலுவலகப் பணிகள் தாமதப்படும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும்.


குடும்பத்துக்கு அவசியமான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு, யாரிடமும் எதிர்ப்பைக் காட்டாமல் அனுசரித்துச் செல்ல வேண்டும். கலைத் துறையினருக்கு, வீண் கவலை, காரிய தாமதம் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு, மனத்தில் தைரியம் கூடும். மாணவர்களுக்கு, கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்குப் பாராட்டு கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, நீலம்.
எண்கள்: 5, 7, 8.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் நிகழும். மனோதிடம் அதிகரிக்கும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன், புதன் சாரம் பெற்று தைரிய, வீரிய ஸ்தானத்தில் அனுகூலமான முறையில் சஞ்சரிக்கிறார். உத்தியோகத்தில் எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை குறையும். உங்களைப் பற்றிய அவதூறுகளைப் பொருட்படுத்தாமல் ஒதுங்கிச் செல்ல வேண்டும்.

பெண்களுக்கு, எதிலும் சாமர்த்தியமாகச் செயல்பட்டு காரிய வெற்றியைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, வீண் அலைச்சல் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு, எந்தக் காரியத்திலும் ஆலோசித்து ஈடுபட வேண்டும். மாணவர்களுக்கு, கூடுதல் கவனத்துடன் பாடங்களைப் படிக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூர் செல்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: ருத்திரமூர்த்தியை வெள்ளிக்கிழமையன்று வணங்க எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் வாக்கு ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களின் சேர்க்கையால் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். அனைத்தையும் சமாளிக்கும் திறன் வந்து சேரும். பழைய பாக்கிகள் சிறிது தாமதத்துக்குப் பின்னர் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் தேவையில்லாத விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளால் திடீர்ச் செலவு உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வரும். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளுக்கு, மனத்தடுமாற்றம் நீங்கும். மாணவர்களுக்கு, பாடங்களில் சந்தேகம் நீங்கும். உற்சாகமாகப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்.
திசைகள்: மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: பச்சை, மஞ்சள்.
எண்கள்: 3, 5.
பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் கிரகங்களின் கூட்டணியால் மிகப் பெரிய நன்மைகளை அடையப் போகிறீர்கள். பணவரவு அதிகரிக்கும். மனத்தில் உற்சாகம் தோன்றும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் வந்து சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பார்கள். அக்கம்பக்கத்தவரை அனுசரித்துச்செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லும்போதும், நெடுந்தூரப் பயணங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு, கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவாக்ரள்.

கலைத் துறையினருக்கு, மனத்தில் புதிய தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, குடும்பத்தினர் வழியில் ஆதாயம் உண்டு. மனநிம்மதியைப் பெறுவார்கள். எதிர்பார்க்கும் பதவிகள் வந்து சேரும். மாணவர்களுக்கு, கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டுப் போட்டிகள் சாதகமாகப் பலன் தரும். சகமாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்.
திசைகள்: வடக்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை.
எண்கள்: 2, 5.
பரிகாரம்: சரஸ்வதியைப் பூஜித்து வர அறிவுத் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். ராசிக்குச் செவ்வாய் வருகிறார். உத்தியோகத்தில் இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் அனுசரித்துச்சென்றால் அமைதி நிலவும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தைக் காண்பிக்காமல் பேச வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம்.

எதிலும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். பெண்களுக்கு, எதையும் யோசித்துச் செய்ய வேண்டும். கலைத் துறையினருக்கு, வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும். அரசியல்வாதிகளுக்கு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு, திட்டமிட்டுப் பாடங்களைப் படிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 1, 3, 6.
பரிகாரம்: பைரவரைத் தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சுப பலன்கள் உண்டாகும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பணியாளர்களால் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு, மேலதிகாரிகள் கூறுவதைக் கேட்டுத் தடுமாற்றம் தோன்றலாம். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்துச் சமாதானமாகப் பேச வேண்டும்.

வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். பி பெண்களுக்கு, எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். கலைத் துறையினருக்கு, சாமர்த்தியமான பேச்சால் காரிய வெற்றி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, பணவரவு கூடும். மாணவர்களுக்கு, படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்வி உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்,
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு,
நிறங்கள்: பச்சை, மஞ்சள்,
எண்கள்: 2, 3, 5,
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனக்குழப்பத்தைப் போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


வார ராசி பலன்கள்மேஷம் முதல் கன்னி வரை

You May Like

More From This Category

dream

கனவு மெய்ப்பட...

இணைப்பிதழ்கள்
mobile-homes

நடமாடும் வீடுகள்

இணைப்பிதழ்கள்

More From this Author