

கல்வி ஸ்டார்ட் அப் நிறுவனமான பிரெய்னர்ஸ் பிஸ்னஸ் ஸ்கூல் தேசிய அளவிலான ஊக்கத்தொகைத் திட்டத் தேர்வை நடத்தவிருக்கிறது. இத்தேர்வில் தேர்ச்சியடையும் 1,000 மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். தேர்வில் முதலிடத்தைப் பிடிப்பவருக்குத் தங்கப் பதக்கம், ரூ.1 லட்சம் கல்வி ஊக்கத்தொகையுடன் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான ஆன்லைன் படிப்பு இலவசமாக வழங்கப்படும்.
தகுதி
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் படித்துவரும் 14-25 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும் ‘பிரெய்னர்ஸ் டேலண்ட் சர்ச்’ தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெறவேண்டும்.
என்ன சோதிக்கப்படும்?
கணிதத் திறனை, எண் சார்ந்த அறிவை, சிக்கலுக்குத் தீர்வு காணும் திறனைச் சோதிக்கும் குவாண்டிடேட்டிவ் ஆப்டிடியூட் (20 மதிப்பெண்), ஆங்கில மொழித் திறன் (30 மதிப்பெண்), பகுத்தறிவுத் திறன் (20 மதிப்பெண்), பொது அறிவு (30 மதிப்பெண்) ஆகியவை அடங்கிய 100 மதிப்பெண்களுக்குரிய ஆன்லைன்வழித் தேர்வு இது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 7 ஆகஸ்ட் 2019
தேர்வு: 18 ஆகஸ்ட் 2019
விண்ணப்பிக்க: http://www.b4s.in/Vetrikodi/BTS01
- சாதனா