Published : 29 Jul 2019 11:05 AM
Last Updated : 29 Jul 2019 11:05 AM

எர்டிகாவிலிருந்து உதயமாகும் மாருதி எக்ஸ் எல் 6

கார் சந்தையில் ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனை ஆன டாப் 10 கார்களில் 7 கார்கள் மாருதி நிறுவனத்தின் கார்கள். அந்த அளவுக்கு இந்தியாவின் கார் சந்தையைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறது மாருதி. வாடிக்கையாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை துல்லியமாகக் கணிக்கும் மாருதி நிறுவனம் அடுத்து அறிமுகப்படுத்தப்போவது மாருதி எக்ஸ் எல் 6 என்ற மாடலைத்தான்.

எர்டிகாவிலிருந்து உதயமாகும் இந்த எக்ஸ் எல் 6 மாடல் ஆறு இருக்கைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த எக்ஸ் எல் 6 மாடலின் அம்சங்கள் முழுமையாக இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், சில விவரங்கள் கசிந்துள்ளன. இதில் ஆல்ஃபா, சீட்டா என இரண்டு வேரியன்ட்கள் வரும் எனக் கூறப்படுகிறது. முழுமையான எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் விளக்குகள், முழுமையான கருப்பு வண்ண இன்டீரியர், உயரம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையில் டிரைவர் இருக்கை உள்ளிட்ட அம்சங்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது. 

மேலும் இதில் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படும். டாப் வேரியன்ட்டான ஆல்ஃபாவில் ரிவர்ஸ் கேமரா, லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி இருக்கைகள், குரூயிஸ் கன்ட்ரோல், டூயல் டோன் கலர் ஸ்கீம், பிளாக் அலாய் வீல்கள் ஆகியவை கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இதில் பிஎஸ் 6 தர நிர்ணய முறையில் உருவாக்கப்பட்டுள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்  ஸ்மார்ட் ஹைபிரிட் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது. இன்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல், 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என இரண்டுவிதமான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் கிடைக்கின்றன. 

தோற்றத்தில் கவர்ச்சியை கூட்டுவதற்காக மாருதி எக்ஸ் எல் 6 மாடலில் முக்குப் பகுதி செங்குத்தாக அமைக்கப்பட்டு, அதில் ஹூட் ஃபிளாட்டாக பொருத்தப்பட உள்ளது. மேலும் புதிய ட்ரேப்சாய்டல் கிரில் அமைப்பு, மத்தியில் டூயல் குரோம் ஸ்ட்ரிப்புடன் வடிவமைக்கப்பட உள்ளது. 

ஸ்போர்ட்டியான லுக் தரும் வகையில் முன்புற பம்பரிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.  கதவுகள், டெயில் கேட் ஆகியவை ஸ்டேண்டர்ட் எர்டிகாவில் இருப்பது போலவே இருந்தாலும், ரைடிங் உயரமும், பாடி கிளாடிங் உயரமும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இது மாருதி எக்ஸ் எல் 6 மாடலுக்கு தனி லுக்கைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி நெக்சா ஷோரூம் மூலம் இந்த மாடல் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x