Published : 23 Jul 2019 10:25 AM
Last Updated : 23 Jul 2019 10:25 AM

பொறியியல் மாணவர் போட்டி!

சாதனா 

இந்தியப் பொறியாளர்கள் நிறு வனத்தின் (ஐ.இ.ஐ) கீழ் உள்ள தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்றம் (NDRF) பொறியியல் மாணவர்களுக்குத் தேசிய அளவில் வடிவமைப்புப் போட்டியை நடத்தவிருக்கிறது.
‘50-வது அனைத்திந்திய மாணவர் வடிவமைப்புப் போட்டி 2019’ என்ற தலைப்பிலான இப்போட்டியில் ஏரோஸ்பேஸ், வேளாண்மை, கட்டிடக் கலை, வேதியியல், சிவில், கணினி, மின்னியல், மின்னணு வியல் - தொலைத்தொடர்பு, சூழலியல், கடல்சார், இயந்திர வியல், உலோக வியல் மற்றும் பொருட்கள், சுரங்கம், உற்பத்தி, ஜவுளி ஆகிய 15 பொறியியல் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இப்பிரிவுகள் சார்ந்து பொறியியல் மாணவர்கள் வடிவமைத்த திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 1 தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் பரிசாக வழங்கப் படும். வெற்றியாளர்களுக்குச் சான்றி தழும் பரிசுகளும் வழங்கப்படும்.

தகுதி

பி.இ./பி.டெக்./எம்.இ./எம்.டெக்./எம்.எஸ். ஆகிய படிப்புகளைப் படித்துவரும் இறுதியாண்டு மாணவர்கள் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். இவற்றுக்கு இணையான படிப்பை ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி.-ல் படித்துவருபவர்களும்  ஐ.இ.ஐ.-ல் சீனியர் டெக்னிஷியன் அல்லது டெக்னிஷியன் மெம்பராக இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். யாராக இருப்பினும் AMIE தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 
10 ஆகஸ்ட் 2019
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய, 

கூடுதல் விவரங்களுக்கு: 
http://www.ndrf.res.in/doc/formawards.pdf

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x