Published : 17 Jul 2019 11:36 AM
Last Updated : 17 Jul 2019 11:36 AM

பள்ளி உலா

கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, காட்டுமன்னார்கோவில்.

கிராமப்புற மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த  நோக்கத்தில் வீர. முத்துக்குமரன், நவநீதம் அம்மையாரால் 1981-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 39 ஆண்டுகளாக கல்விப் பணியில் வெற்றிநடை போட்டுவருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் காட்டுமன்னார் கோவிலிலேயே அதிக மதிப்பெண் பெற்ற பள்ளியாகத் திகழ்கிறது. நவீன அறிவியல் ஆய்வுக்கூடம், கணினி ஆய்வகம், ஏராளமான நூல்களைக் கொண்ட சிறந்த நூலகம், ஸ்மார்ட் வகுப்பறை போன்றவை இந்தப் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ரோபோடிக், வேத கணிதம், அபாகஸ் போன்றவற்றுக்குச் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன.

தற்காப்பு கலைகளான கராத்தே, டேக்வாண்டோ, தியானம், யோகா போன்றவற்றுக்கு நாள்தோறும் பயிற்சி அளிக்கப்படுகின்றன. .
அண்ணா விருது, ஆளுநர் விருது போன்றவற்றை இந்தப் பள்ளி மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள். அபாகஸ் போட்டியில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பரிசுகளைக் குவித்து வருகிறார்கள்.  
’உழைப்பு, கல்வி, உயர்வு’ போன்றவற்றின் முக்கியத்துவத்தை இந்தப் பள்ளி மாணவர்கள் உணர்ந்திருப்பதால், சிறந்த கல்விக்கூடமாகத் திகழ்கிறது இந்தப் பள்ளி. 

அரசு மேல்நிலைப் பள்ளி,  வேளச்சேரி, சென்னை.

1976-ம் ஆண்டு பெரியசாமி கோயில் இடத்தில்  ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளி,  44-ம் ஆண்டை நோக்கி வெற்றிநடை போடுகிறது.
இங்கு படித்த மாணவர்கள் ஆட்சியர் , மருத்துவர், இணை இயக்குநர், ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.  
பாட்டு, விளையாட்டு, யோகா போன்றவை, திறமையான ஆசிரியர்கள் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

மத்திய அரசின் கல்வி வளர்ச்சிக்  கொள்கையின்படி மத்தியக் கல்வி நிறுவனத்துடன் (CBSC Schools) தமிழக அரசுப் பள்ளிகள் இணைந்து செயல்படுவதற்காக, தமிழ்நாட்டில் 20 அரசுப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. அதில் சென்னையில் வேளச்சேரி அரசுப் பள்ளி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியுடன் இணைந்து மாணவர்கள் முன்னேற்றத்துக்காகவும் திறன் மேம்பாட்டுக்காகவும் பல்வேறு செயல்பாடுகள் பகிர்ந்து கொள்ளப்படு கின்றன.
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் நடத்தும் பல்வேறு நிகழ்வுகளில் இந்தப் பள்ளி மாணவர்கள் முனைப்புடன் பங்குபெற்று வருகின்றனர்.

மாவட்ட அளவில் இந்தப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில்  சிறந்து விளங்குகின்றனர்.
நாட்டுநலப்  பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம், சாரண சாணியர் இயக்கம், பசுமைப்படை இலக்கிய மன்றம் போன்ற இணை அமைப்புகள் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. சாரண இயக்கத்தின் உயரிய விருதான ‘ராஜ்ய புரஸ்கர்’ விருதை இந்தப் பள்ளி மாணவர் பெற்றுள்ளார். பள்ளி வளாகத்தில் மூலிகைத் தோட்டத்தை அமைத்து, மாணவர்களுக்கு அதன் பயன்பாடு குறித்துச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை இந்தப் பள்ளியில் அதிகரித்து வருகிறது.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x